பாளையங்கோட்டை, மதுரை, திருச்சி ஆகிய மத்திய சிறைகளிலும், தென் தமிழகத்தில் உள்ள மாவட்டச் சிறைகளிலும் பீடி உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் பயன்பாடு தொடர்பாக விதிக்கப்பட்ட தடையை கடுமையாக அமல்படுத்தக் கோரிய வழக்கு. புகையிலை பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் உள்ள விதிகளை கடுமையாக பின்பற்ற மதுரை அமர்வு உத்தரவு.
மனுதாரர் தரப்பில், "முழுமையான தடைதான், கோரிக்கை" என தெரிவிக்கப்பட்டது.
நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த சையத் அலி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "பாளையங்கோட்டை, மதுரை, திருச்சி ஆகிய மத்திய சிறைகளிலும், தென் தமிழகத்தில் உள்ள மாவட்டச் சிறைகளிலும் பீடி உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் பயன்பாடு தொடர்பாக விதிக்கப்பட்ட தடையை கடுமையாக அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட வேண்டும். மேலும், புகை பிடிக்காத கைதிகளை தனியாக பிரித்து வைப்பதை அமல்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே ராமகிருஷ்ணன் அமர்வு, "மனுதாரரின் கோரிக்கைகளில் முரண்பாடுகள் உள்ளன. ஒரு கோரிக்கை முழுமையான தடையை கோருகின்றனது. மற்றொரு கோரிக்கை புகை பிடிப்பவர்களை தனியாக வைக்க வேண்டுமென கோருகிறது" என குறிப்பிட்டனர். மனுதாரர் தரப்பில், "முழுமையான தடைதான், கோரிக்கை" என தெரிவிக்கப்பட்டது.
விதிகளை கடுமையாக பின்பற்ற உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
அதையடுத்து நீதிபதிகள், "புகையிலைப்பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் உள்ள விதிகளை கடுமையாக பின்பற்ற உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
