பிரபல ரவுடி வெள்ளைக்காளியை என்கவுன்ட்டர் செய்யப் போறாங்க - சொல்வது யார் தெரியுமா?
மதுரையில் கிளாமர்காளி கொலை வழக்கில் பிரபல ரவுடி வெள்ளைக்காளி கைது - மதுரை அழைத்து வந்து விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டம்.
Continues below advertisement

கைது - மாதிரிப்படம்
விசாரணை என்ற பெயரில் வெள்ளைகாளியை என்கவுன்ட்டர் செய்ய காவல்துறையினர் ரகசிய திட்டம் என கூறி வெள்ளைகாளி குடும்பத்தினர் சமூகவலைதளங்களில் செய்திகளை பரப்பி வருகின்றனர்.
வெள்ளை காளியின் ஆதரவாளர்களால் படுகொலை
மதுரையில் திமுக பிரமுகர் வீ.கே.குருசாமி தரப்புக்கும், வெள்ளைக்காளி தரப்பினர் இடையே உள்ள மோதல் போக்கால் 21 கொலை சம்பவங்கள் நடந்துள்ளது. இந்நிலையில் மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்த ‘கிளாமர்’ காளி என்ற காளீஸ்வரன் (32) கடந்த மார்ச் 22ஆம் இரவு தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் பிரபல ரவுடி வெள்ளை காளியின் ஆதரவாளர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் வெள்ளை காளியின் தாயார் ஜெயக்கொடி (65) மற்றும் அவரது ஆதரவாளர்கள் என 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து தெப்பக்குளம் பங்கஜம் காலனி பகுதியை சேர்ந்த சுபாஸ் சந்திரபோஸ் என்பவரும் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
என்கவுன்ட்டர் செய்ய திட்டம்
இதனிடையே கிளாமர் காளி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக பிரபல ரவுடி வெள்ளை காளி வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அவரை மதுரை மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவரை மதுரை மாவட்ட காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனிடையே விசாரணை என்ற பெயரில் வெள்ளைக்காளியை அழைத்துவந்து காவல்துறையினர் என்கவுன்ட்டர் செய்ய திட்டமிட்டுள்ளதாக காவல்துறையினர் மீது வெள்ளைககாளி குடும்பத்தினரும் அவரது ஆதரவாளர்களும் குற்றம்சாட்டி சமூகவலைதளங்களில் செய்திகளை பரப்பிவருகின்றனர்.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.