தனது தந்தையின் தீவிர ரசிகரை அழைத்து வாழ்த்து தெரிவித்ததோடு ரஜினி பவன் என்று அவரது பெயரில் ரஜினி ரசிகரின் புதிய வீட்டின் சாவியையும் ரசிகருக்கு கொடுத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட சௌந்தர்யா ரஜினிகாந்த்.
ரஜினி ரசிகர் கட்டிய வீடு - அதில் ரஜினியின் மெழுகு சிலை
திரைப்பட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த கோல்டன் சரவணன். தனது சொந்த முயற்சியில் பல ஆண்டு கணவான தமது சொந்த வீட்டை கட்டி வருகிறார். திருப்பரங்குன்றம் மலைக்குப் பின்புறம் 1300 சதுர அடியில் 1மாடி கட்டடம் கட்டியுள்ளார். இந்த வீட்டிற்கு ஸ்ரீ ரஜினி பவன் என்ற பெயர் வைத்து வீட்டின் முன்புறம் ரஜினி புகைப்படம் வைத்து வண்ண விளக்குகளும் வீட்டின் உள்ளே நடிகர் ரஜினியின் மார்பளவு மெழுகு சிலை வைத்து கோவில் போல் அமைத்துள்ளார்.
புதுமலையின் சாவியை வழங்கிய செளந்தர்யா ரஜினிகாந்த்
கிட்டத்தட்ட வீட்டின் பணிகள் நிறைவடைந்து விட்டனர். வருகிற 23 ஆம் தேதி வீட்டின் கிரகப்பிரவேசம் வைத்திருக்கிறார். இந்த கிரகப்பிரவேசத்தில் ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணன் கலந்து கொள்கிறார். மேலும் அனைத்து மாவட்டத்திலிருந்தும் ரஜினி ரசிகர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் சரவணன் தெரிவித்திருந்தார். ஆனால் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணன் தற்போது உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் நேற்று மதுரைக்கு வந்திருந்த, ரஜினியின் இளைய மகன் சௌந்தர்யா ரஜினிகாந்த், தனியார் விடு ஒன்றில் தங்கியுள்ளார். இந்நிலையில் கோல்டன் சரவணனை அழைத்து வாழ்த்து தெரிவித்ததோடு, அவர் கட்டி வரும் புதுமனையின் சாவியை அவருக்கு வழங்கினார். உடன் அவரது கணவர் விசாகன் வணங்காமுடி இருந்தார்.