சுற்றுச்சூழலை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை தெற்கு ரயில்வே நிர்வாகம் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை கோட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு அருகில் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10.5 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் இந்த காற்றாலை ரூபாய் 72 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காற்றாலை மூலம் 2021 - 22 ஆம் ஆண்டில் 25.686 மில்லியன் யூனிட்ஸ் மின்சாரம் தயாரிக்கப்பட்டது. இதன் மூலம் ரூபாய் 15.412 கோடி மின்சார செலவு குறைக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றாலை மூலம் இதுவரை 80.095 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு அதன் மூலம் ரூபாய் 48.057 கோடி மின்சார செலவு மிச்சப்படுத்தப் பட்டுள்ளது. மேலும் மதுரை கோட்ட ரயில்வே அலுவலகத்தில் சூரிய சக்தி மூலம் 11 கிலோ வோல்ட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு அலுவலக பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது.
மதுரை ரயில் நிலையத்தில் நடைமேடை மேற்கூரைகளில் 100 கிலோ வோல்ட் சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கும் போட்டோ வோல்டைக் தகடுகள் அமைக்கப்பட்டு சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சூரிய சக்தி மின்சாரம் மூலம் 100% பகல் நேர மின்சார தேவை சமாளிக்கப்பட்டு வருகிறது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Crime : ”கஞ்சா பதுக்கலில் ஈடுபட்ட குற்றவாளிகளின் 58 லட்ச ரூபாய் மதிப்புடைய சொத்துக்கள் முடக்கம்” - மதுரை மாவட்ட கண்காணிப்பாளர்