அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஆதரவாக பாஜகவின் நீதி கேட்பு பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுப்பு, தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என பாஜக அறிவித்துள்ளது.
மதுரை பா.ஜ.க.வினர் நடத்தும் போராட்டம்
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டும், இவ்விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி சார்பில் மதுரை முதல் சென்னை வரை இப்பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மதுரையில் ஜனவரி 3 ஆம் தேதி (நாளை) தொடங்கும் பாஜக மகளிரணியின் நீதி கேட்பு பேரணியானது திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம் வழியாக சென்னை சென்றடைகிறது.
குஷ்பூ தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டது
பின்னர் பேரணியின் நிர்வாகிகள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிக்க திட்டமிட்டுள்ளனர். இந்த நீதி கேட்பு பேரணியை தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பேரணிக்கு அனுமதி கேட்டு மதுரை மாநகர பாஜக காவல் ஆணையர் மற்றும் திலகர் திடல் காவல் நிலையத்தில் மனு அளித்தனர்.
தீச்சட்டி எந்தி நீதி கேட்பு பேரணி தொடங்கும்
இந்நிலையில் பாஜக பேரணிக்கு மதுரை மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. பாஜக திட்டமிட்டபடி தடையை மீறி பேரணி நடத்தப்படும், என மதுரை மாநகர பாஜக மாவட்டத் தலைவர் மகா.சுசீந்திரன் தகவல் தெரிவித்தார். மேலும் மதுரை சிம்மக்கலில் உள்ள செல்லாத்தமன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள கண்ணகி சிலை முன் தீச்சட்டி எந்தி நீதி கேட்பு பேரணி தொடங்கும் எனவும், காவல்துறை அனுமதி மறுத்தால் தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என மஹா.சுசீந்திரன் தெரிவித்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - அரசுப்பள்ளிகளை தத்தெடுக்கிறோமா? பெருந்தன்மையை கொச்சைப்படுத்துவதா? தனியார் பள்ளிகள் சங்கம் கேள்வி!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Bhopal Gas Tragedy: 5,000+ உயிர்களை பறித்த விஷவாயு - 40 ஆண்டுகள், போபாலில் இருந்து நச்சுக் கழிவுகள் அகற்றம்