Madurai Power Shutdown: மதுரையில் பல்வேறு பகுதிகளில் நாளை (22.07.2025) மின்சார வழித்தடங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5  மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணி  - Madurai Power Shutdown  
 
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மதுரை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.  
 
எந்த நேரத்தில் மின் நிறுத்தம்?  
 
பராமரிப்பு பணிக்காக வழக்கமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அறிவிக்கப்பட்ட இடங்களில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 மணி அல்லது 10 மணியிலிருந்து மாலை 4 அல்லது 5 மணிவரை, மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அதன்படி மதுரையில் பல்வேறு பகுதிகளிலில் மின்தடை செய்யப்படுகிறது.
 
மின்தடை செய்யப்படும் பகுதிகள்
 
திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திக்குளம், அய்யர்பங்களா, வள்ளுவர் காலனி, குலமங்கலம், கண்ணனேந்தல், பரசுராம்பட்டி, சூர்யா நகர், ஊமச்சிக்குளம், கடச்சனேந்தல், லட்சுமி நகர், மகா உச்ச பரம்பு மேடு, பார்க் டவுன், தபால்தந்தி நகர், பாமாநகர், பம்பாநகர், டி.டபிள்யு.ஏ.டி., காலனி, சொக்கிகுளம், சண்முகா நகர், விஜய் நகர், கலைநகர் ஒருசில பகுதிகள், இ.பி.காலனி. விஸ்வநாதபுரம், மகாத்மா காந்தி நகர், முல்லை நகர், சிவக்காடு, கிருஷ்ணாபுரம் காலனி, ஆனையூர், பனங்காடி, மீனாட்சிபுரம்.