மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( ஜனவரி 22, 2026, வியாழக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

Continues below advertisement

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் நாளை காலை 09 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் (காலை 9:00- மாலை 5:00 மணி)
 
சோழவந்தான், தச்சம்பத்து பம்பிங் ஸ்டேஷன், இரும்பாடி, மீனாட்சிநகர், ஜெயராம் டெக்ஸ், விஜய லட்சுமி பேக்டரி, தாராப்பட்டி, கச்சிராயிருப்பு, கீழ மட்டையான், மேலமட்டையான், நாராயணபுரம், தச்சம்பத்து,தென்கரை, முள்ளிப்பள்ளம், மன்னா டிமங்கலம், அய்யப்ப நாயக்கன்பட்டி, தாமோதரன் பட்டி, குருவித்துறை, சித்தாதிபுரம்.
 
கொட்டாம்பட்டி, சின்ன கொட்டாம்பட்டி, பொட்டப்பட்டி, வெள்ளிமலை, முடுக்கன் காடு, தொந்திலிங்கபுரம், சொக்கம்பட்டி, மணப்பச்சேரி, வெள்ளினி பட்டி, வி. புதுார், சொக்க லிங்கபுரம், மணல்மேட்டு பட்டி, பள்ளபட்டி, புதுப் பட்டி, கருங்காலக்குடி, பாண்டாங்குடி.
 
உசிலம்பட்டி, மறவர்பட்டி, சத்திரப்பட்டி, வெள்ளாளப்பட்டி, வலையபட்டி, ராமகவுண்டன்பட்டி, தெத்துார், மேட்டுப்பட்டி, கரடிக்கல், சின்ன பாலமேடு, சுக்காம்பட்டி, கோணப்பட்டி, சாத்தையாறு அணை, எர்ரம்பட்டி, தேவசேரி, மாணிக்கம் பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கி பட்டி, பொந்துகம்பட்டி, சேந்தமங்கலம், முடுவார்பட்டி, குறவன்குளம், ஆதனுார், மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, மாலைப்பட்டி, பாலமேடு.
 
அலங்காநல்லுார், நேஷனல் சுகர்மில், பி.மேட்டுப்பட்டி, பண்ணைக்குடி, அழகாபுரி, புதுப்பட்டி, செல்ல கவுண்டன்பட்டி, சிறு வாலை, அம்பலத்தாடி, பிள்ளையார் நத்தம், குறவன்குளம், மீனாட்சி புரம், இடையபட்டி அய்யூர், கோவில்பட்டி, வைகாசிப்பட்டி, கீழச்சின்னணம்பட்டி.   
             
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

Continues below advertisement

 பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.