மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( ஆகஸ்ட் 20, 2025, புதன்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

மாதாந்திர பராமரிப்பு பணிகள்

 தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் நாளை காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் இடங்கள்

சொக்கலிங்கபுரம், உதினிப்பட்டி, மணல்மேட்டுப்பட்டி, மலம்பட்டி, ஆலம்பட்டி, கணேசபுரம், பாண்டாங்கு. தே.கல்லுப்பட்டி நகரை சுற்றிய பகுதி முழுவதும், ராம்நகர், ராமுணிநகர், பாலாஜிநகர், கெஞ்சம்பட்டி, காரைக்கேணி, வன்னிவேலம்பட்டி, தே. குண்ணத்தூர், கிளாங்குளம், தம்பிபட்டி, கொண்டுரெட்டிபட்டி, ஆண்டிபட்டி, காடனேரி, எம்.சுப்பலாபுரம், வில்லூர், புளியம்பட்டி, வையூர், சென்னம்பட்டி, பெரியபூலாம்பட்டி, ஆவடையாபுரம், மத்தக்கரை, சின்னரெட்டிபட்டி, குருவநாயக்கன்பட்டி, கள்ளிக்குடி, குராயூர், M.புளியங்குளம், சென்னம்பட்டி, மையிட்டான்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, தென்னமநல்லூர், சித்தூர், ஆவல்சூரம்பட்டி, திருமால், சிவரக்கோட்டை, பாரமவுண்ட் மில் ஏரியா, ராஜாராம் பவுடர் கம்பெனி, அலுமினியம் மெட்டல் பவுடர் கம்பெனி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் ஆகும். ​