Madurai Power Shutdown: மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (19.06.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.

பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை
 
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின் தடை செய்யப்படுவது வாடிக்கை. மதுரை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரையில் நாளை பல்வேறு பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது.
 
மின்விநியோகம் தடைசெய்யப்படும் பகுதிகள்
 
வலையங்குளம்
 
வலையங்குளம், எலியார்பத்தி, நெடுமதுரை, பாரபத்தி, சோளங்குருணி, நல்லுார், குசவன் குண்டு, மண்டேலா நகர், சின்ன உடைப்பு, வலையபட்டி, ஓ.ஆலங்குளம், கொம்பாடி.
 
விஸ்வநாதபுரம்
 
விஸ்வநாதபுரம், மகாத்மா காந்தி நகர், முல்லை நகர், சிவக்காடு, கிருஷ்ணாபுரம் காலனி, ஆனையூர், பனங்காடி, மீனாட்சிபுரம்.
 
திருப்பாலை - அய்யர்பங்களா
 
திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திக்குளம், அய்யர்பங்களா, வள்ளுவர் காலனி, குலமங்கலம், கண்ணனேந்தல், பரசுராம்பட்டி, சூர்யாநகர், ஊமச்சிக்குளம், கடச்சனேந்தல், மகாலட்சுமி நகர், உச்சபரம்புமேடு, பார்க்டவுன், தபால் தந்தி நகர், பாமாநகர், பம்பா நகர், பொறியாளர் நகர், குடிநீர் வடிகால் வாரிய காலனி, செட்டிக்குளம், சண்முகாநகர், விஜய் நகர், கலைநகரின் சில பகுதிகள், மீனாட்சி நகர், இ.பி.காலனி.
 
சோழவந்தான் துணைமின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்
 
சோழவந்தான், தச்சம்பத்து வாட்டர் பம்பிங் ஸ்டேசன், இரும்பாடி, மீனாட்சி நகர், ஜெயராம் டெக்ஸ், விஜயலெட்சுமி பேக்டரி, மவுண்ட் விட்ரா ஸ்கூல், மேலக்கால், தாராப்பட்டி, கச்சிராயிருப்பு, கீழமட்டையான், மேலமட்டையான். நாராயணபுரம், தேனூர், திருவேடகம், தச்சம்பத்து, மேலக்கால் பாலம், தென்கரை, ஊத்துக்குழி, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி. குருவித்துறை, சித்தாதிபுரம் உள்ளிட்ட பகுதிகளாகும்.