Madurai Power Shutdown: மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (10.06.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணி

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மதுரை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். இந்நிலையில் மதுரை சமயநல்லூர் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் மின்தடை செய்யப்படுவதாக சமயநல்லூர் பகுதி மின் செயற்பொறியாளர் பி.ஜெயலெட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் மின்தடை செய்யப்படும் பகுதிகள்.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:
 
சமயநல்லூர், தேனூர், கட்டப்புளிநகர், தோடனேரி, சத்தியமூர்த்திநகர், வைரவநத்தம், தனிச்சியம், நகரி, திருவாலவாயநல்லூர், அதலை, பரவை, விஸ்தாரா அப்பார்ட்மெண்ட், பரவை மெயின் ரோடு, மங்கையர்கரசி கல்லூரி பகுதிகள், பொதும்பு, பரவை மார்க்கெட், கோவில்பாப்பாகுடி உள்ளிட்ட பகுதியாகும்.
 
அதே போல் மதுரை கிழக்கு மின் செயற்பொறியாளர் இரா.கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மின் தடை செய்யப்படும் பகுதிகள்.
 
பனையூர், சொக்கநாதபுரம், அய்யனார்புரம், சாமநத்தம், பெரியார் நகர், கல்லம்பல், சிலைமான், கீழடி மற்றும் அதற்குட்பட்ட பகுதிகள் ஆகும்.