Madurai Power Shutdown ; மதுரை மக்களே லிஸ்டை நாளைய (06.02.26) மின்தடை லிஸ்டை கவனமாக பார்க்கவும்.  

Continues below advertisement

மின்தடை அறிவிப்பு

தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் நாளை காலை 09 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Continues below advertisement

மின்தடை ஏற்படும் பகுதிகள்

உசிலம்பட்டி, மறவர்பட்டி, சத்திர வெள்ளாளப்பட்டி, வலையபட்டி, ராமகவுண்டன்பட்டி, தெத்துார், தெ.மேட்டுப் பட்டி, கரடிகல் சின்ன 1 பாலமேடு, சுக்காம்பட்டி, கோணப்பட்டி, சாத்தை யாறு அணை, எர்ரம்பட்டி, தேவசேரி, மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கிபட்டி, பொந்துகம்பட்டி, சேந்தமங்கலம், உசிலம்பட்டி, முடுவார் பட்டி, குறவன்குளம், ஆதனுார், மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, மாலைப்பட்டி, பாலமேடு, அலங் காநல்லுார் சர்க்கரை ஆலை, பி.மேட்டுப்பட்டி, பண்ணைக்குடி அழகாபுரி, புதுப்பட்டி, செல்ல கவுண்டன்பட்டி, சிறுவாலை, அம்பலத்தாடி, பிள்ளையார்நத்தம், குறவன்குளம், மீனாட்சி புரம், இடையபட்டி, அய்யூர்கோவில்பட்டி, வைகாசிபட்டி, கீழசின்னணம்பட்டி.

மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை    

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

 பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.  

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க.