மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று ( டிசம்பர் 31, 2025, புதன்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
 
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் இன்று காலை 09 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
மின்தடை ஏற்படும் பகுதிகள்
 
உறங்கான்பட்டி, தொழிற்பேட்டை, வரிச்சியூர், களிமங்கலம், சக்குடி, விளத்துார், ஓடைப்பட்டி, ராஜாக்கூர், இளமனூர், சக்கிமங்கலம், கார்சேரி, குன்னத்துார்.
 
முத்துபட்டி, சிதம்பரம்பட்டி, அயிலான்குடி, சிட்டம்பட்டி, அப்பன் திருப்பதி, கைலாசபுரம், மாங்குளம், செட்டிகுளம், கண்ட முத்துப்பட்டி, லட்சுமிபு ரம், பட்டணம், வெள்ளரிப்பட்டி, அரும்பனுார், மலையாண்டி புரம், புதுப்பட்டி, தேத்தாங்குளம், ரைஸ் மில், அரிட்டாபட்டி, கல்லம்பட்டி, விநாயகபுரம், சூரக்குண்டு, தெற்கு தெரு, மருதுார், பூலாம்பட்டி, திருக்காணை, இலங்கிப்பட்டி, காயம்பட்டி, வலச்சிக் குளம், நரசிங்கம்பட்டி.
 
மேலவளவு, பட்டூர், எட்டி மங்கலம், சென்னகரம் பட்டி, ஆலம்பட்டி, கேசம்பட்டி, அன்பில் நகர், புலிப்பட்டி, வெள்ளிமலைபட்டி, சாணிபட்டி, அருக்கம்பட்டி, சேக்கிபட்டி, கைலம்பட்டி, தும்பைபட்டி, கச்சிராயன்பட்டி, மணப்பட்டி, கல்லம்பட்டி, வஞ்சிநகரம்.
 
அரிட்டாபட்டி, வல்லாளபட்டி, செட்டியார்பட்டி, சாம்பிராணிபட்டி, கிடாரிப்பட்டி, கூலாண் டிபட்டி, தேர்குன்றான் பட்டி, அழகாபுரி, ஆயத்தம்பட்டி, மரைக்காயர்புரம், கோனவராயன்பட்டி, வேப்படப்பு, பூஞ்சுத்தி, சுண்ணாம்பூர், ஆமூர், இடையபட்டி, டி. வல்லாளப்பட்டி, திருவாதவூர், கட்டயம்பட்டி, கொட்டகுடி.