Madurai Power Shutdown: மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் (16.11.2024) அன்று மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மின் பாதை பராமரிப்பு பணி
தமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும்போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி அல்லது காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும்.
செய்திக் குறிப்பு மின் தடை நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில் மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் மின் தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து மதுரை மேற்கு செயற்பொறியாளர் சி.லதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 16.11.2024 (சனிக்கிழமை) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் 110/11 கி.வோ ஆனையூர் துணைமின்நிலையத்தில் உயரழுத்தமின்பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் அன்றையதினம் கீழ்கண்ட பகுதியில் மின்தடை ஏற்பட உள்ளது.
மின்விநியோகம் தடைப்படும் ஊர்களின் பெயர்கள்:
பாலமேடு மெயின் ரோடு, சொக்கலிங்க நகர் 1வது தெரு முதல் 7வது தெரு வரை, பெரியார் நகர், அசோக் நகர், ரயிலார் நகர், ஹவுசிங் போர்டு, சிலையனேரி, புது விளாங்குடி கூடல் நகர், RMSColony, சொக்கநாதபுரம், ராஜ்நகர், பாத்திமாகல்லூரி, பாத்திமாகல்லூரி எதிர்புறம், பழைய விளாங்குடி, சக்தி நகர், துளசி வீதி, திண்டுக்கல் மெயின் ரோடு, விஸ்தார குடியிருப்பு, பரவை சந்தை, தினமணிநகர், கரிசல்குளம், அகில இந்திய வானொலி நிலையம், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில் பாப்பாகுடி பிரிவு, லெட்சுமிபுரம் ஆகிய பகுதிகளாகும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Kanguva : கங்குவா ரிலீஸூக்கு தடையாக நிற்கும் அமரன்... தினுசு தினுசா பிரச்சன வருதே
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”அசைன்மெண்ட் NTK - உளவுத்துறைக்கு கொடுக்கப்பட்ட Task” அதிர்ச்சியில் நிர்வாகிகள்..?