என்னைப் பொறுத்தவரை அதிகார பகிர்வு தேவை. இந்தியா முழுவதும் தேவை. வரும் காலங்களில் அதிகார பகிர்வு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. பகிர்ந்துதான் வேண்டும். - எம்.பி.மாணிக்கம் தாகூர் பேட்டி.

மாணிக்தாகூர் எம்.பி செய்தியாளர் சந்திப்பு
 
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள பாம்பன் நகர் பகுதியில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பதிமூணு புள்ளி 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற உள்ளது. இதில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்து புதிய கட்டடத்தை திறந்து வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்...,” மதுரை 99 ஆவது வார்டு நியாய விலை திறப்பு விழாவில் மதுரை துணை மேயர் மற்றும் மாவட்ட உறுப்பினர் மற்றும் கூட்டணி கட்சிகள் கலந்து கொண்டுள்ளோம். பொங்கல் பரிசு வழங்கிய தொடங்கி இருக்கிறோம்.
 
அதிகார பகிர்வு குறித்த ட்வீட் குறித்த கேள்விக்கு:
 
பதிவை சரியாக படியுங்கள் நேற்று போட்டிருந்த பதிவை படிக்கவில்லை என்று நினைக்கிறேன். அவமானப்படுத்தி இருக்கிறார்.. நேற்று புதுக்கோட்டையில் அமித்ஷா பாஜக முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, முருகன் பெயரை சொல்லி இருக்கிறார். தமிழிசை பேரை சொல்லவில்லை ஏனென்றால் ஆர் எஸ் எஸ் பெண்களுக்கு எதிரான கட்சி, ஆர்எஸ்எஸ் இன்  ஓட்டம் பெண்களை அவமானப்படுத்துவது. தென்பகுதியில் இருந்து வந்ததால் தமிழிசை அக்காவின் பெயரை சொல்லவில்லையா, அவர் பெண் என்பதாலா, அமித்ஷவின் பெண்கள் எதிர்ப்பு மனநிலை இதில் தெரிந்துள்ளது. தொடர்ந்து பெண்களை அவமானப்படுத்துவதும், தமிழர்களை அவமானப்படுத்துவதும் மிகத் தெளிவாக தெரிகிறது. இதற்கு அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழிசை அக்காவை அவமானப்படுத்தியதற்காக அவருடைய பெயரைக் கூட சொல்லாமல் அவர் ஆளுநராக இருந்து பாஜக தமிழகத்தில் அடையாளம் தெரியாமல் இருந்தபோது தாமரை மலர்ந்தே தீரும் என்று பேசிய தமிழிசை அக்காவை அவமானப்படுத்தி இருக்கக் கூடாது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது நேற்று என்னுடைய பதிவு. இன்றைய பதிவு லயோலா கல்லூரி கருத்து கணிப்பு படி எங்கள் கூட்டணி வெற்றி பெறக்கூடிய கூட்டணி. 
 
விஜய் குறித்த கேள்விக்கு:
 
லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பு படி அவர் மூன்றாவது இடத்தில் இருக்கிறார் விஜய்.
 
அண்ணன் எல்.முருகன் மதுரை விமான நிலையம், மெட்ரோ என எது கேட்டாலும் செய்ய மறுக்கிறார். திருப்பரங்குன்றத்தில் மதவெறியை தூண்டவேண்டும், பிரச்சினையை கிளப்ப வேண்டும் என்றால் அண்ணன் முருகன் வேலோடு வந்துவிடுகிறார். மதுரையின் உண்மையான பிரச்னைகளுக்கு எல்.முருகன் குரல் கொடுக்க வேண்டும். அதற்காக அவர் பதவியில் இருக்கும்போது நல்லது செய்ய முயற்சி எடுக்க வேண்டும்.
 
எம்பி ஜோதிமணி குறித்த கேள்விக்கு:
 
ஜோதிமணி குறித்து அகில இந்திய பொறுப்பாளர் பதில் சொல்லியிருக்கிறார். அதோடு அது முடிந்துவிட்டது. திண்டுக்கல் மாவட்ட தலைவர் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி இருக்கிறார்கள் அகில இந்திய பொறுப்பாளர் அதற்கான பதிலை சொல்லி இருக்கிறார்.
 
வெற்றி பெற்றால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பீர்களா என்ற கேள்விக்கு:
 
இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்கிறோம். வெற்றி உறுதியாகிக் கொண்டிருக்கிறது. அதற்காக அனைவரும் சேர்ந்து பணியாற்றுவோம். 
 
தேர்தல் காரணத்தால் பொங்கல் தொகுப்பு அதிகரித்துள்ளது குறித்த கேள்விக்கு:
 
பொங்கல் வரும்போது தான் பொங்கல் பரிசு அறிவிக்க முடியும். பாஜக பொங்கலுக்காக இதுவரை கரும்பு கூட யாருக்கும் கொடுத்ததில்லை. அவர்களைப் பொறுத்த அளவில் தமிழக மக்களுக்கு முதல்முறையாக மூவாயிரம் கொடுப்பது என்பதை பாராட்ட மனசில்லை. பொங்கலுக்கு கொடுக்காமல் தீபாவளிக்கா கொடுக்க முடியும். இது மிகவும் மகிழ்ச்சியான முடிவு போன முறையை விட தமிழக அரசின் முறை அதிகரித்திருப்பது பாராட்டத்தக்க விஷயம்.
 
வைகோவை புறக்கணித்தீர்களா சமரசம் செய்வீர்களா என்ற கேள்விக்கு:
 
அண்ணன் வைகோ அவர்களின் பயணம் பாராட்டுக்குரியது 82 வயதிலும் இளைஞரை போல முக்கியமான சமத்துவ பிரச்னைக்காக நடைபயணம் மேற்கொள்கிறார் அவருக்கு எங்கள் பாராட்டுக்கள் அவரைப் போன்ற மூத்த அரசியல்வாதிகள் இளைஞர்களை நல்வழியில் கொண்டு வரவதற்காக உழைக்கும் அவரது பயணம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள். 
 
காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் திமுகவால் வெல்ல முடியாதா என்ற கேள்விக்கு:
 
நான் ஐபிடிஎஸ் சர்வே என்று பதிவு போட்டு இருக்கிறேன். அதை தெளிவாக பாருங்கள் எல்லா கட்சிகளுக்கும் எந்த அளவு ஓட்டு சதவீதம் வரப்போகிறது என்று போட்டிருக்கிறேன். அதில் எனக்கு மாற்றுக் கருத்து உள்ளது. ஆனால் அவர்கள் சொல்வதில் ஒரு சில உண்மைகள் இருக்கிறது. இந்தியா கூட்டணி வெற்றி பெறும் தனிக் கட்சிகளை கூட்டணி வெற்றி பெறுவது என்பதுதான் எங்கள் கருத்து. கூட்டணியால் தான் வெல்ல முடியும்.  தமிழகத்திலும் இந்தியாவிலும் கூட்டணி தான் வெற்றி பெறும். இதுதான் உண்மை பாஜகவை போல நாங்கள் இல்லை என்று சொல்ல விரும்பவில்லை. கூட்டணியால்தான் இந்தியா முழுவதும் வெற்றி பெறுகிறோம். இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணி இருக்கிறது தமிழகத்தில் மதச்சார்பற்ற கூட்டணி திமுக தலைமையில் உள்ளது திமுக வெற்றி பெறும்.
 
காங்கிரசுடன் விஜய் இணைந்தாலும் வெற்றி பெற முடியும் என்று ஐ பிடிஎஸ் தரவில் உள்ளது குறித்த கேள்விக்கு
 
ஐ பி டி எஸ் இன் கணக்கு என்பது வேற, மக்களிடம் கேட்ட தரவு என்பது வேற, அவர்களின் டேட்டா சொல்வது இந்தியா கூட்டணி சேர்ந்தால் 33 சதவீத வாக்குகளுடன் மிக அதிகமான தூரத்தில் இருக்கிறோம். பாஜக கூட்டணி 26 சதவீதத்தில் நின்றுவிடும் என்பதுதான் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
 
அதிகாரப் பகிர்வு தேவையா என்ற கேள்விக்கு:
 
என்னைப் பொறுத்தவரை அதிகார பகிர்வு தேவை. இந்தியா முழுவதும் தேவை. அதிகாரம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. பகிர்ந்துதான் வேண்டும்
 
விஜய் வந்ததற்கு பிறகு தான் இது போன்ற விமர்சனங்கள் வருகிறது இதற்கு முன்பு காங்கிரஸ் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்ற கேள்விக்கு:
 
அரசியல் விமர்சகர்கள் சொல்வது தேவையில்லை, மக்கள் சொல்வதுதான் முக்கியம். இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மக்களின் பிரச்னைகளுக்கு பதில் கொடுக்கின்ற கூட்டணியாக, அதில் பங்கு பெறுகின்ற கூட்டணியாக, மக்கள் பிரச்னையை குறைக்கின்ற கூட்டணியாக உள்ளது. இவ்வளவு சிக்கல்களை உருவாக்கிய ஒரு மத்திய அரசு தமிழக அரசுக்கு சிக்கல்களை உருவாக்குகிறது. வரவேண்டிய நிதியை கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். அதிகார துஷ்பிரயோகம் செய்கின்ற பாஜகவை எதிர்த்து தமிழக அரசு நடக்கிறது. மக்கள் பிரச்னைகளை இந்தியா கூட்டணி தெளிவாக கையாள்கிறது. முதல்வர் சிறப்பான ஆட்சியை கொடுத்து வருகிறார்.