நாளை 24.11.2025 தேதி திங்கள்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை தமிழ் நாடு மின்சார வாரியம் பேரையூர் மற்றும் சாப்டூர் துணைமின் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Continues below advertisement


மின் தடை ஏற்படும் பகுதிகள்


பேரையூர் நகர் பகுதி, சின்னபூலாம்பட்டி, பெரியபூலாம்பட்டி, P.தொட்டியபட்டி, சாலிசந்தை, சிலைமலைப்பட்டி, கூவலாபுரம், ராவுத்தன்பட்டி, மேலப்பட்டி, ச.பாரப்பத்தி, தும்பநாயக்கன்பட்டி, சாப்டூர் நகர் பகுதி, பழையூர், செம்பட்டி, அத்திபட்டி, மைனூத்தாம்பட்டி, வண்டாரி, அணைக்கரைபட்டி, வண்டபுலி, வாழைத்தோப்பு மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களுக்கு ஆகிய பகுதிகளுக்கு நாளை 24.11.2025 காலை 09.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்பதை செயற்பொறியாளர் பொறிஞர். P.முத்தரசு அவர்கள் தெரிவிக்கின்றார்.


மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை


மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.  


பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.  


மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.