டிசம்பர் 5ம் தேதி ஹாக்கி வீரர்களுக்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கத்தில் பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட உள்ளது- மதுரை ஆட்சியர் பிரவீன்குமார் பேட்டி

 

மதுரை மாவட்ட ஆட்சியர் செய்தியாளர் சந்திப்பு

 

விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மதுரை ரேஸ்கோர்ஸ் விளையாட்டு மைதான வளாகத்தில் 20 கோடி மதிப்பீட்டில் சர்வதேச ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள உலகக்கோப்பை ஹாக்கா போட்டியில் இந்தியா, அர்ஜென்டினா, ஜப்பான், கனடா, ரஷ்யா உள்ளிட்ட  24 அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகளுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் தொடர்பாக மதுரை ஆட்சியர் பிரவீன்குமார், காவல் ஆணையர் லோகநாதன், ஹாக்கி சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்...,” மதுரையில் நடைபெறும் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி நவம்பர் 28-டிசம்பர் 10ம் தேதி வரை 12 நாட்கள் நடைபெற உள்ளது. இப்போட்டியில் 12 நாடு வெளிநாடு வீரர்கள் இந்தப்போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

 

ஜல்லிக்கட்டு அரங்கத்தில் பிரம்மாண்ட வரவேற்பு

 

40ஆயிரம் லிட்டர் தண்ணீர் ஹாக்கி மைதானத்திற்கு தேவைப்படும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் மதுரை மாநகராட்சி மூலம் செய்யப்படுள்ளது. 1450 தற்காலிக இருக்கைகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

300க்கும் மேற்பட்டோர் அமர்ந்து பார்க்கும் வகையில் இரண்டு கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 5ம் தேதி ஹாக்கி வீரர்களுக்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கத்தில் பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட உள்ளது.  ஹாக்கி உலகக்கோப்பை போட்டிகளை காண கூட்டம் அதிகமாக வந்தால் எல்இடி திரைகள் அமைக்கப்படும்.

வீரர்கள் தங்குமிடம் மற்றும் விளையாடும் இடங்களில் 24 மணி நேர காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. மதுரை மாநகரில் 8 தனியார் விடுதிகளில் வீரர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீரர்கள் மைதானத்திற்கு வரும் போது செல்லும் போதும் காவல்துறை பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

 

பொதுமக்கள் நுழைய 6 வது நுழைவு வாயில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்

 

ஹாக்கி மைதானத்திற்கு பொதுமக்கள் நுழைய 6 வது நுழைவு வாயில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இன்று இரவில் இருந்து மதுரையில் நடைபெறும் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகளுக்கான டிக்கெட் ஆன்லைனில் வழங்கப்படும். இந்த டிக்கெட்டுகள் முற்றிலும் இலவசம். டிக்கெட் கியூஆர் கோர்டை ஸ்கேன்செய்து மைதானத்திற்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். நடைபெறும் போட்டிகள் லீக் போட்டிகளாக நடைபெற உள்ளது. சென்னை மதுரையில் போட்டிகள் நடைபெற உள்ளது. வீரர்களுக்கு பல்வேறு விவரங்கள் அடங்கிய சிறிய ரக கையேடு கொடுக்கப்பட உள்ளது. உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகளை மாணவ மாணவிகள் பார்வையிட ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.