மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் அலுவலகம் அமைந்துள்ளது.  இங்கு ரேஷன் கடைகளில் உள்ள பொருட்களின் இருப்பு விவரங்கள், இதர விவரங்கள் முழுதும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்களுக்கு கொடுப்பதற்காக பொங்கல் பண்டிகை வேட்டி-சேலைகள் வைக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை அலுவலகத்தில் இருந்து கரும்புகை வெளியேறி தீப்பிடித்து எரிந்ததை பார்த்த சிலர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

 





அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் 68 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 29,232 சேலைகளும், 12,500 வேட்டிகளும் எரிந்து நாசமானது.  இது தவிர சேதமான பிற பொருட்கள் மற்றும் நாற்காலிகளின் விலை குறித்து மதிப்பிடப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து மதுரை தல்லாகுளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

 

 









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண