இந்தியா முழுவதும் தொழில்நுட்ப பராமரிப்பு காரணமாக செப் 20 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை பாஸ்போர்ட் இணையதளம் செயல்படாது என மதுரை மண்டல அதிகாரி கூறியுள்ளார்.

 

பாஸ்போர்ட் மற்றும் விசா ஆகியவை மிக முக்கியமான ஆவணங்கள்

 

வெளிநாட்டு பயணத்தின் போது பாஸ்போர்ட் மற்றும் விசா ஆகியவை மிக முக்கியமான ஆவணங்களாகும். பாஸ்போர்ட் என்பது வெளிநாட்டு அதிகாரிகளுக்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உங்களின் அடையாளமாகும். விசா உங்கள் வருகையின் நோக்கம் மற்றும் கால அளவைக் குறிக்கிறது. ​​இந்த ஆவணங்கள் சட்டச் சிக்கல்கள் ஏதுமின்றி வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ள உத்தரவாதம் அளிக்கின்றன. இந்நிலையில் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை பாஸ்போர்ட் இணையதளம் செயல்படாது என மதுரை மண்டல அதிகாரி தெரிவித்துள்ளார்.

 


 

தொழில்நுட்ப பராமரிப்பு முடிந்த பின்பு பாஸ்போர்ட் சேவை இணையதளத்தை பயன்படுத்தலாம்

 

”இந்தியா முழுவதும் தொழில்நுட்ப பராமரிப்பு காரணமாக 20.09.2024 (வெள்ளிகிழமை) இரவு 8 மணி முதல் 23.09.2024 (திங்கள்கிழமை) காலை 6 மணி வரை, பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது” என மதுரை மண்டல  பாஸ்போரட் அதிகாரி தெரிவித்துள்ளார். பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் அனைத்துவிதமான சேவைகளுக்கும் தொழில்நுட்ப பராமரிப்பு முடிந்த பின்பு பாஸ்போர்ட் சேவை இணையதளத்தை பயன்படுத்தலாம் எனவும் மேலும் விவரங்களுக்கு மண்டல பாஸ்போர்ட் அலுவலக தொலைப்பேசி 0452-2521205 மற்றும் 0452-2521204 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.