Madurai | மகனை அடித்துக் கொன்று சத்தமில்லாமல் சைக்கிளில் எடுத்துச் சென்ற பெற்றோர்! சிக்கவைத்த சிசிடிவி!

மது போதையில் ரகளை பெற்ற மகனை கட்டையால் அடித்துக் கொலை செய்து வைகை ஆற்று பகுதியில் தீவைத்து கொன்ற பெற்றோர்

Continues below advertisement

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள அரசு மதுபான கடை எதிரே வைகை ஆற்றங்கரையோரம் எரிந்த நிலையில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் எரிந்த நிலையில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Continues below advertisement

காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் வாலிபரை மர்மநபர்கள் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்துவிட்டு சாக்குமூட்டையில், கொண்டு வந்து ஆற்றங்கரையோரம் போட்டு எரித்துக் கொலை செய்து இருக்கலாம் என தெரிய வந்தது. அதை  தொடர்ந்து சி.சி.டி.வி கேமரா காட்சிகளை கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
 
இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
 
 

 
இந்த நிலையில் அந்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளது அதை விசாரித்த காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் படி மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் கிருஷ்ணவேணி தம்பதியர் இவருடைய ஒரே மகன்  மணிமாறன் திருமணமாகி மனைவியைப் பிரிந்து தாய் தந்தையுடன் வசித்து வந்த நிலையில் தினமும் மது அருந்திவிட்டு தாய் தந்தையுடன் தகராறு செய்து வந்துள்ளார்.  தினமும் தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த முருகேசன் கிருஷ்ணவேணி இருவரும் மகனை கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு சாக்கு மூட்டையில் கட்டி தன்னுடைய சைக்கிளில் வைத்துக் கொண்டு வந்து வைகை கரையோரம் போட்டு தீவைத்து கொளுத்தி விட்டு சென்றுள்ளனர். இந்த  சி.சி.டி.வி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டே முருகேசன் மற்றும் கிருஷ்ணவேணி இருவரையும் கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
 
 
 
 
Continues below advertisement
Sponsored Links by Taboola