மதுரை மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற விவகாரத்தில் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதலாமாண்டு மாணவர்கள் 250 பேரை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஹிப்போக்ரடிக் உறுதிமொழிக்குப் பதிலாக, மாற்றியமைக்கப்பட்ட 'மகரிஷி சரக் ஷபத்' உறுதிமொழி ஏற்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவ இயக்குனரகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்த விவகாரத்தில் தற்போது டீன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துறை ரீதியான விசாரணை நடத்த மருத்துவக் கல்வி இயக்குநருக்கு அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்