ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்கள் தினம் என சொல்லப்படுகிறது. ஆனால் ஏப்ரல் ஃபூல் இல்லை ஏப்ரல் கூலாக தான் இருக்க வேண்டும் என மரம் நடும் பணியை  மதுரை பசுமை நண்பர்கள் குழு செய்து வருகிறது. கடந்த 2018 முதல் மதுரை மாவட்டம் முழுவதும் ஏராளமான மரக்கன்றுகளை நட்டு கோடை வெயிலை கட்டிப் படுத்த வேண்டும் என்ற மிகப்பெரும் முயற்சியை செய்து வருகின்றனர்.


 





இந்நிலையில் இன்று பசுமை நண்பர்கள் மதுரை மேற்கு ரோட்டரி சங்கம், அமெரிக்கன் கல்லூரியோடு இணைந்து இந்த ஆண்டை குறிக்கும் வண்ணம் 2023 மரக்கன்றுகளை வழங்கினர். கடமைக்கு மரக்கன்றுகளை வழக்காமல் கொடுக்கப்படும் ஒவ்வொரு மரக்கன்றுகளையும் கன்காணிக்கும் வகையில் கன்று பெற்ற விபரங்களை கியூவார் கோடு மூலம் பெற்றுக் கொண்டனர். அதன் மூலம் தொடர்ச்சியாக மரம் வளர்ச்சியை கண்காணிக்க உள்ளனர். 



 

 

இதுகுறித்து பசுமை நண்பர்கள் அமைப்பை சேர்ந்த பொன்.குமார் நம்மிடம்...," மதுரை அமெரிக்கன் கல்லூரி வரலாற்று சிறப்பு மிக்க கல்லூரி. இங்கு இந்தாண்டு ஏப்ரல் கூல் நிகழ்ச்சியை முன்னெடுத்தது மிகப்பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. ரோட்டரி சங்க தலைவர்  ராமநாதன், அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிருஷ்டோபர், மற்றும் ஞானபிரகாஷ், சண்முகம், டி.சி.சிவக்குமார், பேராசிரியர் ராஜேஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டது கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது. கென்யா நாட்டை சேர்ந்த வாங்கரி மாத்தாய் அவர்களின் பிறந்த தினத்தை போற்றும் வகையில் அவர் பற்றிய குறிப்புகளையும் பேசினோம். பசுமை பட்டை அமைப்பின் மூலம் மரம் நடவு செய்து பல்வேறு சாதனைகளை செய்தவர். அவர் வழியில் நாமும் இயற்கைக்கு தொண்டு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டோம்" என்றார்.

 





 

அமெரிக்கன் கல்லூரி தவமணி கிருஷ்டோபர் கூறுகையில்...," ஏப்ரல் கூல் என்ற கவர்ச்சியான  வார்த்தையாக மட்டும் இல்லாமல், களத்தில் இறங்கு பணி செய்தது கூடுதல் மகிழ்ச்சி அளித்தது. அமெரிக்கன் கல்லூரியில் 99-வகையான மரங்கள் உள்ளது. அதனை தவிர்த்து 22 புதிய நாட்டு வகை மரக்க்ன்றுகளை பசுமை நண்பர்கள் நட்டு வைத்தனர். மேலும் எங்கள் கல்லூரியில்  ஆர்வமுள்ள 2023 மாணவர்களுக்கும் மரக்கன்று வழங்கினர். வரும் காலங்களில் மதுரை ஏப்ரல் கூலாக வேண்டும்" என மகிழ்ந்தார்.