மதுரை அருகே இருக்கும் ‘கீழடி அருங்காட்சியகம்’ 2 ஏக்கர் பரப்பில் ரூ.18.43 கோடி செலவில், தமிழர் பெருமை பேசும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை கீழடி அகழாய்வுத் தளத்தில் 2018ம் ஆண்டு முதல் தொடர்ந்து தற்போது வரை ஐந்து கட்டங்களாக அகழாய்வு மேற்கொண்டு வருகிறது. அகழாய்வுகள் மூலம் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் பொதுமக்கள் பார்க்கும் வகையில் 2 ஏக்கர் நிலப்பரப்பில் தமிழக மரபுசார் கட்டடக்கலை அடிப்படையில் கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் 5-ம் தேதி திறந்து வைத்தார். கீழடி அகழாய்வு அருங்காட்சியகத்தை திறந்து வைத்தது தொடர்பாக சமூக வலைத்தள பதிவை வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்