தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருமங்கலத்தில் உள்ள தனியார் அமைப்பின் மூலம் ஒரு கோடி 50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது 90க்கும் மேற்பட்ட வாகனங்களில் நிவாரண பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டது.


தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு அதிகம் இருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 


குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் இடைவிடாது அதிக கனமழை பெய்தது.


 






டிசம்பர் 17ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு தொடங்கிய மழை இடைவிடாது 24 மணி நேரத்தையும் தாண்டி பெய்தது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது. வரலாறு காணாத மழையால் இந்த 4 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.





இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் சார்பிலும் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள போகோ சேரிடபிள் டிரஸ்ட் அமைப்பு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தது.




பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாய், போர்வை, பெண்களுக்கான நைட்டி நாப்கின், மெழுகுவர்த்தி குழந்தைகளுக்கான நாப்கின், பிஸ்கட் உணவு, தண்ணீர் பாட்டில்கள் என ரூபாய் ஒரு கோடி 50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை ஏற்பாடு செய்து 90க்கும் மேற்பட்ட வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டு போகோ சேரிடபிள் டிரஸ்ட் சேர்மன் விஜயராகவன் தலைமையில்  நிர்வாகிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மூலம் தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மூலம் ஏற்கனவே 45 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.




இதுவரை போகோ சாரிட்டபிள் டிரஸ்ட் மூலம் சுமார் 2 கோடி வரையிலான நிவாரண பொருட்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியுள்ளனர். இதுபோல் இயன்ற உதவிகளை பொதுமக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்ய வேண்டும் என செயிட்டபிள் டிரஸ்ட் சேர்மன் டாக்டர் விஜயராகவன் கேட்டுக் கொண்டுள்ளார்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - பனை விதையில் அழகான கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மை, அசத்தல் விழிப்புணர்வில் மதுரையின் பசுமை ஆர்வலர்