மோடிக்கு இந்தியர்கள் தான் எதிரிகள் ஏனென்றால் மோடி இந்தியாவின் எதிரி என மதுரையில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேட்டியளித்தார்.

 

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 14 மாதங்களாக நடைபெற்ற மக்கள் சந்திப்பு கோரிக்கை மனு பெறும் இயக்கத்தின் சார்பாக சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை நேரடியாகவும், முகாம்கள் மூலமாகவும் சந்தித்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை தொகுத்து மதுரை மாவட்ட ஆட்சியரிடம் சங்கீதாவிடம் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வழங்கினார்.



 

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சு.வெங்கடேசன் அளித்த பேட்டியில், “மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட இடங்களில் 14 மாதங்கள் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்தப்பட்டது. 124 ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்தப்பட்டது. 14 மாதங்களில் ஒரு லட்சம் மக்களை சந்தித்து இருக்கிறோம். 10,000 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது, மக்கள் சந்திப்பு முகாமில் 1,000 பட்டாக்கள் பெற்று தரப்பட்டது. மதுரை மாவட்டம் முழுவதும் 32 ஆயிரம் பேருக்கு நூறு நாட்கள் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. தலையீட்டின் காரணமாக 82 ஆயிரம் பேருக்கு நூறு நாட்கள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. 10,000 மனுக்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா என ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஆய்வு செய்யப்படும். மொழிப்போர் தியாகிகளுக்கு மதிப்பூதியத்தை உயர்த்தி வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது” என்றார்.




 

 

எதிர்க்கட்சிகள் உருவாக்கிய கூட்டமைப்பான இந்தியா ஊழல்வாதிகள் நிறைந்தது என மோடி கருத்து கூறியது குறித்த கேள்விக்கு, “இந்தியாவின் மீது மோடிக்கு இருக்கும் பயத்தை நான் ரசிக்கிறேன். மோடிக்கு இந்தியர்கள் தான் எதிரிகள் ஏனென்றால் மோடி இந்தியாவின் எதிரி, இந்திய ஒற்றுமையின் எதிரி மோடி, இந்திய பன்மைத்துவத்தின் எதிரி பாஜக, இந்திய மதச்சார்பின்மையின் எதிரி இந்துத்துவா, இந்தியாவை கண்டு மோடி அலறுவதை, பயப்படுவதை நாங்கள் ரசிக்கிறோம்" எனக் கூறினார்.

 





ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.










ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண