மதுரை மக்களே கவனமா இருங்க... இனி குப்பை கொட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்
மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து மதுரை மாநகராட்சியின் சார்பில் குப்பைகள் சேகரிப்பு பணிகள் செய்யும் தூய்மை பணியாளர்களிடம் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Continues below advertisement

மதுரையில் கொட்டப்பட்ட குப்பைகள்
பாண்டிகோவில் ரிங்ரோடு பகுதிகளில் குப்பைகள் கொட்டினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நீதிமன்றம் உத்தரவுப்படி குப்பை அகற்றம்
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் மதுரை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் வளாகம் பின்புறம் உள்ள பகுதிகளில் கடந்த சில வருடங்களாக குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. மேலும் அந்த குப்பை கழிவுகளை அன்றாடம் தீயிட்டும் எரித்து வந்தனர். இதனால் காற்று மாசடைவதுடன் துர்நாற்றம் வீசியதால் அந்த பகுதியில் கடக்க கூடிய வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வந்தனர். இந்த உயர்நீதிமன்ற கிளை நீதிபதியின் உத்தரவைத் தொடர்ந்து கடந்த சிலநாட்களுக்கு முன் மதுரை - சென்னை தேசிய நெடுஞ்சாலை இருபுறங்களிலும் கொட்டப்பட்டு இருந்த மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை ஐந்துக்கும் மேற்பட்ட ஜேசிபி மற்றும் 10க்கும் மேற்பட்ட லாரிகள் உதவியுடன் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது. இந்நிலையில் பாண்டிகோவில் ரிங்ரோடு பகுதிகளில் குப்பைகள் கொட்டினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என உத்தவிடப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதிப்பு
மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலை பகுதியான மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், உலகனேரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, உத்தங்குடி மற்றும் பாண்டிக் கோவில் ரிங்ரோடு ரவுண்டானர ஆகிய பகுதிகளுக்கு இடையில் உள்ள காலியிடங்கள், சாலையின் ஓரங்கள், நீர்நிலைகள், மற்றும் திறந்தவெளி கால்வாய்கள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனத்தார் குப்பைகளை கொட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப் படுவதுடன் பொது மக்களுக்கும் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
அபராதம் ரூ.1 லட்சம் விதிக்கப்படும்
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 பிரிவு 180, தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் 2023 பிரிவு 384 மற்றும் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 (Solid Waste Management Rules 2016) மதுரை மாநகராட்சி திடக்கழிவு 2017 (Solid Waste Management Bylaw 2017) சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986 பிரிவு 15 ஆகிய சட்ட விதிகளின்படி தொடர்ச்சியாக குப்பை கொட்டுவோர் மீது எச்சரிக்கை அறிவிப்பு விடுத்த 24 மணி நேரத்திற்குள் அதனை அகற்றா விட்டால் அவர்கள் மீது அபராதம் ரூ.1 லட்சம் விதிக்கப்பட்டு சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும்.
மதுரை மாநகராட்சி உத்தரவு
எனவே பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து மதுரை மாநகராட்சியின் சார்பில் குப்பைகள் சேகரிப்பு பணிகள் செய்யும் தூய்மை பணியாளர்களிடம் வழங்குமாறும், குப்பைகளை அருகில் மாநகராட்சியின் சார்பில் வைக்கப்பட்டுள்ள உள்ள குப்பைத் தொட்டியில் கொட்டுமாறும்” மதுரை மாநகராட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - மதுரை குப்பை மாநகரம் போல் மாறிவிட்டது - நீதிபதி நேற்று வேதனை... இன்று உடனே அகற்றப்பட்ட குப்பைகள்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளீக் செய்யவும் - Job Fair: 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு; எங்கு? எப்போது? - முழு விவரம் இதோ
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.