மதுரை காமராஜர் சாலையில் உள்ள அரங்கில்  2023-24 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட் அலசல் குறித்த நிகழ்ச்சியில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்  கலந்து கொண்டு பேசினார். அதில், “பட்ஜெட்டை  பொருளாதார கண்ணாடி வழியாக பார்க்க வேண்டும். சமுதாய மற்றும் அரசியல் கண்ணாடி வழியாகவும் பார்க்கலாம், நாடாளுமன்றத்தில் எல்லோரும் பொருளாதார  வல்லுநர்கள் அல்ல; சிலர் சமுதாய , அரசியல் கண்ணாடி பார்வையில் பேசுகிறார்கள். இங்கு நடைபெறும் கூட்டத்தில் அரசியல் கண்ணாடி இல்லாமல், பொருளாதார, சமுதாய கண்ணாடியை அணிந்து பேசுகிறேன்.  ஏனென்றால் நமது மத்தியிலயே அமலாக்கத்துறை இருக்கலாம் அதனால் இங்குள்ளவர்கள் பாதிக்கப்படலாம் என்பதால் அரசியல் கண்ணாடி அணியாமலயே பேசுகிறேன். நாட்டின் உற்பத்திற்கு நான்கு இன்ஜின்கள் தேவை,  முதலில் மக்களின் நுகர்வு மொத்த உற்பத்தில் 60% நுகர்வு தான், இரண்டாவது அரசின் முதலீடு, மூன்றாவது தனியார் முதலீடு, நான்காவது ஏற்றுமதி ஆகியவைதான். சில காலங்களில் 4 இன்ஜின்களும் முழு திறனோடு செயல்பட்டது. சில காலங்களில் இதில் மாறி மாறி ஓடலாம். ஆனால் இந்த அரசு மறைமுகமாக இந்தியா என்ற வண்டியை அரசின் முதலீட்டை நம்பியுள்ளது, இதனை சொற்களில் ஒப்புகொள்ளவில்லை, எண்ணிக்கையில் ஒப்புக்கொண்டுள்ளனர். காரணம் மக்களின் நுகர்வு குறைந்துவிட்டது , இந்தியாவில் கார் விற்பனை உள்ளது , பைக் விற்பனை குறைந்துவிட்டது. இந்தியாவில் ஜவுளியின் நுகர்வு குறைந்துவிட்டது. இதற்கு காரணம் பணவீக்கம், வேலையிழப்பால், நுகர்வு எதிர்பார்த்தைவிட குறைந்துள்ளது, HLL, ITC நிறுவனகளில் கிராம புறங்களில் இருந்து நுகர்வு குறைந்துள்ளது.



 

நம் நாட்டிற்கு ஏற்றுமதி குறைந்துவிட்டது இறக்குமதி அதிகரித்துவிட்டது.  சீனாவின் இறக்குமதி, ஏற்றுமதிக்கு இடையேயுள்ள  இடைவெளி என்பது 100பில்லியன் டாலரை தாண்டியுள்ளது. இந்தியாவில் தனியார் நிறுவனங்கள. முதலீடு செய்வது தயக்கம் காட்டுகிறது. இந்தியாவின் இந்த ஆண்டு திருத்தப்பட்ட மதிப்பீட்டில் 7.5 லட்சம் கோடி அரசு முதலீடு என்று சொன்னார்கள் அதனை இன்னும் நிறைவேற்றவில்லை. தனியார் போன்று அரசு முதலீடு செய்ய முடியாது. அரசிடம் இருந்து முதலீடு பெறுவது என்பது எளிதல்ல ; 10லட்சம் கோடி என்ற அரசு முதலீடு என்பதில் நம்பிக்கை  இல்லை, இது சாத்தியமில்லை. 6.5 %, 7% வளர்ச்சி என்கீறிர்கள் இதனை எண்ணிக்கையால் பார்த்தால் தான் நம்ப முடியும். முதல் காலாண்டில் 13.5% , இரண்டாவது காலாண்டில் 6.3 % என்கீறிர்கள், 3 ஆவது காலாண்டில் 4.1%, 4ஆவது ஆண்டில் 4.1%என காலாண்டு காலாண்டிற்கு சரிகிறது, இதனை எப்படி வளர்ச்சி என கூற முடியும். இந்த அரசு கணிதத்தின் இறுக்கத்தில் இருந்து வெளிவரமுடியாத நிலையில் உள்ளது,  நாட்டின் வளர்ச்சி குறைகிறதே தவிர வளர்ச்சியடைவில்லை. அமெரிக்க அரசு தற்போது இருவாரத்திற்குள் உச்ச வரம்பை உயர்த்தவில்லை எனில் யாருக்கும் சம்பளம் வழங்க முடியாத அளவிற்கான நிலை உருவாகும். இந்த ஆண்டே விவசாயத்துறைக்கு ஒதுக்கியதை விட 7ஆயிரம் கோடி குறைவாக செலவழித்துள்ளனர்.  இதேபோன்று கல்வித்துறை, மருத்துவத்துறை, பட்டியிலனத்தவர்களுக்கு ஒதுக்கிய நிதியை குறைவாக செலவழித்துள்ளனர்.



 

சிறுபான்மை, பழங்குடியின மக்களுக்கான நிதி குறைந்துள்ளதால் அவர்கள்  பாதிக்கப்படுவார்கள். ஒரு குடும்பத்தில் கணவன் 15 ஆயிரம் சம்பளம் என்று கூறிவிட்டு 12 ஆயிரம்தான் மனைவியிடம் கொடுப்பார். அதனால் மனைவி போதிய செலவு செய்யமுடியாமல் சிரமப்படுவார். அது போல தான் இந்த அரசு கணவன் நிலையிலும், மக்கள் மனைவி போன்ற நிலையிலும் உள்ளனர். இந்த அரசுக்கு துறைவாரியாக நிதி ஒதுக்குவதை முழமையாக செலவழிப்பதில்லை, அதனை செலவழிக்கும் எண்ணம் இல்லை, அதற்கு பல்வேறு இடர்பாடுகள் உள்ளன.  இந்த அரசு நிதி ஒதுக்கியதை மட்டும் எண்ணி மகிழ்ச்சி அடைய முடியாது, இதனால் அடிபடபோவது ஏழை எளிய மக்கள் , சிறுபான்மை, பழங்குடியின மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள். உணவு மானியம், , உரங்கள் மானியம, பெட்ரோலிய பொருட்களுக்கான மானியம் இல்லை என அதனை ஒழித்துவிட்டார்கள், உணவு, உரத்திற்கான மானியம் குறைத்தால் உணவுபொருட்கள் விலைவாசி உயரும், இதனால் விவசாயிகளும், ஏழை எளிய,  நடுத்தர மக்களும் பாதிக்கப்படுவார்கள். பணக்காரர்களுக்கு விலை உயர்வை தாங்கும் சக்தி உண்டு ஆனால் ஏழைகள் நடுத்தர வர்க்கத்தினர் இதனை தாங்கமாட்டார்கள்.



 

மத்திய அரசு மனமுவந்து மாநிலங்களுக்கான நிதிகளை வழங்க வேண்டும், மாநில அரசின் ஏராளமான வரிகள் மத்திய அரசுக்கு சென்றுவிட்டது. மத்திய அரசு மாநில அரசுகளுக்கு 3லட்சத்தி 34ஆயிரத்தி 331 கோடி வழங்க வேண்டும் ஆனால் மாநில அரசுகளுக்கு 2லட்சத்தி 74ஆயிரத்தி 934கோடி வழங்கிய நிலையில் 63ஆயிரம் கோடி குறைத்து வழங்கியுள்ளது, இதனால் ஊராட்சி மன்றங்களின் திட்டங்கள் கூட பாதிக்கின்றது, இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக மாநில அரசுக்கு எதிராக மத்திய அரசு செய்யும் மிகப்பெரிய துரோகம், இதனால் மக்களின் அடிப்படை வசதிகள் கிடைக்காமல் போகின்றது.



 

கடந்த 10ஆண்டின் சராசரி வளர்ச்சி விகிதத்தை கணக்கீட்டால் 5.6% சதவிகித வளர்ச்சி பெற வேண்டும், இதற்கு 2004 முதல் 2014 வரை 7.5 % வளர்ச்சி இருந்தது, எனவே கடந்த ஆட்சியை விட இந்த ஆட்சியில் வளர்ச்சி குறைந்துள்ளது.  இந்தியா வளர்ச்சி அடைய வேண்டுமானால் 8% வளர்ச்சி அடைந்தால் மட்டுமே அது சாத்தியம், பசித்த நாடுகள் பட்டியலில் நம் நாடு சரிந்துள்ளோம் , ஆக்ஸாம் அறிக்கையை ஏற்றுக்கொள்ளும் மன நிலைக்கு இந்த அரசு வர வேண்டும். பசி , வறுமை, ஏழ்மை, வேலையின்மை் நம் நாட்டில் உள்ளது என்பதை ஏற்க வேண்டும், இதனை ஒழிக்க நாட்டின் வளர்ச்சி உயர்வு வேண்டும், இந்த வளர்ச்சி ஏற்ற தாழ்வுகளை குறைக்க வேண்டும் என்றார். இந்த 10ஆண்டின் பொருளாதார  ஏற்றதாழ்வு மக்களிடையே அதிகரித்துள்ளது. இந்தியாவின் மொத்த 60% சொத்து 5 சதவீததினரிடம் உள்ளது, இந்த பட்ஜெட் குறித்து வருத்தத்தோடு பகிர்கிறேன், இந்த அரசு இந்த பட்ஜெட்டை திருத்தி ஏழை எளிய மக்களுக்கு நல்வாழ்வு திட்டங்களுக்கு நிதியை ஒதுக்கி வரிச்சலுகை தந்து மக்களை மகிழ்ச்சிபடுத்தும் வகையில் மத்திய பட்ஜெட்டை திருத்தி வெளியிட வேண்டும். அப்போதாவது 10ஆம் ஆண்டின் நிறைவில் நாட்டின் நிலைமை என்ன என்பது இந்த அரசுக்கு புரியும்” என்றார்..