மதுரையில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது பட்டாசு வீசி அராஜகத்தில் ஈடுபட்டதை தட்டி கேட்ட முதியவரை கொலை முயற்சி செய்ய முயன்ற 3 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை.


இந்து மதத்தினரின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நாடு முழுவதும்  வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக, தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சிறுவர் முதல் பெரியவர் வரை புத்தாடை அணிந்து, கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி, இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும், வாழ்த்துக்களை பரிமாறியும் தீபாவளியை கொண்டாடினர். இந்நிலையில் தீபாவளி பட்டாசுகளை வைத்து தொல்லை கொடுத்ததாக 3 நபர்கள்  மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


- World Cup 2023 Stats: முடிந்தது உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் சுற்று - இதுவரை பேட்டிங், பவுலிங்கில் அசத்தியது யார்?




மதுரை மாநகர் கீரைத்துறை காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட சிந்தாமணி போஸ்ட் ஆபீஸ் தெரு பகுதியில் நேற்று மாலை வேலுச்சாமி (61) என்ற அந்த வழியாக கடைக்கு சென்ற பொழுது அந்த பகுதியில்  மது போதையில் நின்று கொண்டிருந்த 3 இளைஞர்கள் சாலையில் செல்லக்கூடிய பொதுமக்கள் மீது பட்டாசுகளை பற்றவைத்து வீசியுள்ளனர். இதனால் பொதுமக்கள் பதறியடித்து அங்கும் இங்கும் ஓடியுள்ளனர் இந்த நிலையில் அந்த வழியாக சென்ற முதியவர் இளைஞர்களை அழைத்து இதுபோன்று செய்யக்கூடாது என அறிவுரை கூறியுள்ளார்.
அப்போது முதியவரை பீர்பாட்டில்களால் குத்தி கொலை செய்து விடுவோம் என மிரட்டியதோடு நாங்கள் மிகப்பெரிய ரவுடி எங்க ஏரியாவில் வந்து எங்களுக்கு அறிவுரை சொல்கிறாய் என கூறி மிரட்டியுள்ளனர்.




இதனையடுத்து முதியவர் வேலுச்சாமி கீரைத்துறை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் கீழ் பொதுமக்கள் மீது பட்டாசு வீசி அச்சுறுத்தல் ஏற்படுத்தியதோடு,  முதியோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சிந்தாமணி போஸ்ட் ஆபிஸ்தெரு பகுதியை சேர்ந்த வேல்முருகன், பாலு மற்றும் கவட்டை என்ற முத்துச்சாமி ஆகிய 3 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் கீரைத்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai: திருப்பாச்சேத்தியில் வாமனச் சின்னம் பொறித்த நிலதானக்கல் கண்டுபிடிப்பு ; தொல்நடை குழுவிற்கு பாராட்டு