தமிழ் இயக்கத்தின் 8-ஆம் ஆண்டு தொடக்க விழா மதுரை தியாகராசர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இது அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்...,” தமிழுக்கு எங்கள் அரசாங்கம் பல வகையில் தொண்டாற்றி கொண்டிருக்கிறது. பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், வழியில் வந்த இந்த ஆட்சி நம் ஆண்டு முதலமைச்சர் அவர்கள் முதல் கடமையாக ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்ற பன்முகத்தன்மை வாய்ந்த இந்தியாவின் குணத்தையே மாற்ற எடுக்கும் முயற்சிகளை நாட்டிலேயே முதல் எதிரியாக இன்று எதிர்த்து நம்முடைய உரிமைகளை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். இன மக்களின் தனித்துவத்தையும் ஒழிக்க முயற்சிகள் மேற்கொண்டு வரும் இந்த சூழ்நிலையிலும், தமிழ்நாடு என்றைக்கும் தலைநிமிர்ந்து நிற்கும் என்ற ஒரு நோக்கத்தோடு எத்தனையோ போராட்டங்கள் நடத்திக் கொண்டு வருகிறோம்.
தமிழ் வளர்ச்சிக்கு திமுகவின் தொண்டு: கீழடி, ஜல்லிக்கட்டு அரங்கம், டிஜிட்டல் நூலகம் - அமைச்சர் பி.டி.ஆர்., பெருமிதம் !
அருண் சின்னதுரை | 12 Nov 2025 03:15 PM (IST)
பல்லாயிரம் ஆண்டு தொன்மை மிக்க நமது மொழி, இந்த கணினி யுகத்திற்கு ஏற்றவாறு தகவல் வைக்க தொலைநோக்கு பார்வையுடன் தலைவர் கலைஞரால் உருவாக்கப்பட்டது. - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெருமிதம்.
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
NEXT PREV
பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், முதல்வர் ஸ்டாலின் என திமுக எப்போதும் தமிழ் வளர்ச்சியில் தொண்டாற்றி வருகிறது - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு
போராட்டங்கள் நடத்திக் கொண்டு வருகிறோம்
கீழடி அருங்காட்சியகம்
இந்த மொழியை பாதுகாப்பதும், நம் மரபுகளை பாதுகாப்பது, நம் பண்பாட்டை பாதுகாப்பதும், எந்த ஒரு அரசுக்கும் முதல் கடமையாக இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் எந்த அளவுக்கு எதிர்க்கிறோமோ, அந்த அளவிற்கு இங்கே இருக்கிறதை வளர்க்கணும் என்ற நோக்கத்துடனும் செயல்படுகிறோம். கீழடி அகழாய்வு இடத்தில் முதல் ஆண்டில் அறிவித்து, இரண்டாவதாக இந்த ஆட்சிக்குள் அந்த அருங்காட்சியத்தை முடித்து, இதுவரைக்கும் வேற எங்கேயுமே இந்த நாட்டில் இல்லாத அளவிற்கு இன் சீட்டு அருங்காட்சியம் எங்கு அகழாய்வு நடந்ததோ, அதன் அருகிலேயே அருங்காட்சியத்தை உருவாக்கி நம் பழமை வாய்ந்த பொருட்கள் கலாச்சாரத்துடைய அடையாளங்கள் எல்லாம் அங்கேயே வெளிப்படையாக அனைவரும் காணும் பாதையில் ஒரு நல்ல எக்சிபிஷன் நடத்திக் கொண்டிருக்கிறோம்.
ஜல்லிக்கட்டு அரங்கம்
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அகழாய்வில் எதுவுமே கண்டுபிடிக்கவில்லை என்று ஒன்றிய அரசாங்கம் அதை நிறுத்தியது.தொடர்ந்து, தமிழ்நாடு அரசு அந்த அகழாய்வை நடத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இன்னும் எவ்வளவு பழமை வாய்ந்த கலாச்சாரம் நம்முடையது என்று தெரிய வருகிறது. ஒரு காலத்தில் ஓராண்டில் 200 பிசி படித்திருந்தால் பொருட்கள் கிடைக்கப் பட்டன. இன்றைக்கு 800c வரைக்கும் கீழடியில தோண்ட தோண்ட இந்த மண்ணின் உண்மை வரலாறும் நம் மக்களின் நம் இனத்தின் பெருமையையும் பழமையும் அறிந்து வருகிறோம். இதே கீழடி பக்கத்தில் இன்னொரு நம் அடையாளத்தை நிறுவி இருக்கிறோம். அதாவது. அலங்காநல்லூரில் தமிழர் தம் வீரத்தின் அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு உலக தரம் வாய்ந்த ஒரு அரங்கத்தை உருவாக்கி இருக்கிறோம்.
துறையில் பெருமை
இத்தகைய செயல்களால் நம்மளுடைய கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் மொழியையும் தொடர்ந்து சிறப்பித்து உலகத்துக்கும் அரிய அளவுக்கு செய்து கொண்டிருக்கிறோம். சில சமயம் வரலாற்றில் நம்மளுக்கு சரியான வாய்ப்பு சரியான நேரத்தில் கிடைக்கும் என்றது உண்மை இந்த இயக்கம் துவங்கும் போது நான் வெறும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன். அதற்குப் பிறகு அமைச்சரான வேற துறைக்கு அமைச்சரானேன். அதற்குப் பிறகு 2023 தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆனேன். ஏன் இது பொருந்தும் என்றால், இன்றைக்கு இந்த எட்டாவது ஆண்டு துவக்க விழாவில் எனக்கு பெரிய வாய்ப்பு என்னவென்றால், என் துறையில் இயங்கும் தமிழ் இணைய கல்விக்கழகத்தில் சிறப்பான விளைவுகளை கண்டிருக்கிறோம். குறிப்பாக நான் இரண்டு முயற்சிகளை இங்கே முன்வைக்க விரும்புகிறேன். தமிழ் இணைய கல்விக்கழகம் தமிழ் மொழி வளர்ச்சிக்கு நல்லதொரு பங்களிப்பு செலுத்துவதற்கு ஒரு தமிழ் விர்சுவல் லைப்ரரி தமிழ் இணைய நூலகம் என்ற ஒரு முயற்சி பல ஆண்டுக்கு முன் தோற்றுவிக்கப்பட்டு ஓரளவுக்கு சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.
லைப்ரரியின் டிஜிட்டல் மாயமாக்கப்படுகிறது
அதில் பல்லாயிரம் ஆண்டு தொன்மை மிக்க நமது மொழி, இந்த கணினி யுகத்திற்கு ஏற்றவாறு தகவல் வைக்க தொலைநோக்கு பார்வையுடன் தலைவர் கலைஞரால் உருவாக்கப்பட்ட இந்த முயற்சி 2015 இல் இருந்து 2021 வரைக்கும் மொத்தம் ஒன்றரை கோடி யுஎஸ் விசிட் நடந்துச்சு இந்த நூலகத்துக்கு இந்த துறைக்கு நான் அமைச்சரான பிறகு இதை இன்னும் சிறப்பிக்கணும். இதில் வெறும் நூல்கள் மற்றும் இருக்கக் கூடாது ஓலைச்சுவடிகள், ஆடியோ, வீடியோ, மல்டி மீடியா எல்லாம் சேர்க்கணும். என்று, முயற்சி எடுத்து இன்றைக்கு பல லட்சம் என்ட்ரிஸ் லைப்ரரியின் டிஜிட்டல் மாயமாக்கப்பட்டுள்ளது. இலவசமாக உலகத் தமிழர்கள் எங்கிருந்தும் இது காணலாம் படிக்கலாம், ஆய்வு செய்யலாம். அந்த மாதிரி செய்திருந்தால் வெறும் ஒன்றரை கோடி விசிட்டர்ஸ் இருந்த இந்த லைப்ரரி கடந்த நான்கு ஆண்டுகளில் 17.2 கோடி வீசிட்டு அதிகரித்துள்ளது. அதன் பலனும் தெளிவாக வெளிவருகிறது” என் பெருமையுடன் தெரிவித்தார்.
Published at: 12 Nov 2025 03:15 PM (IST)