திமுகழக இளைஞர் அணிச் செயலாளர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48-வது பிறந்தநாளை முன்னிட்டு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் மதுரையில் நலத்திட்ட உதவிகள் வழங்கிடும் விழா நடைபெற்றது.
உதயநிதி ஸ்டாலின் 48-வது பிறந்தநாள் விழா
திமுகழக இளைஞர் அணிச் செயலாளரும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48-வது பிறந்தநாளை முன்னிட்டு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கிடும் விழா நடைபெற்றது. மதுரை மகபூப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மதுரை மாநகர் மாவட்ட அயலக அணி சார்பாக அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 837 பேருக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார். தொடர்ந்து மகபூப்பாளையம் Y M C A சிறப்பு பள்ளியில் எல்லிஸ் நகர் பகுதி கழகம் சார்பாக நாற்காலிகள், தலையணை, தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தொடர்ந்து S.S காலனி 61-வது வட்டக் கழகம் சார்பாக மாநகராட்சி தொடக்க பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு புத்தகப்பை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
தாமதமாக வந்த அமைச்சர் - மழையில் நனைந்த மாணவிகள்
மாகப்பூபாளையம் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நோட்டு, பேனாக்கள் அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக மதுரையில் பரவலாக மழை பெய்த நிலையில், பள்ளி முடிந்தும் நலத்திட்டம் வழங்க வேண்டி மாலை 6 மணி வரையில் மாணவிகள் காத்திருந்து பின்னர் அமைச்சர் வந்ததும் நலத்திட்டங்களை பெற்று கொண்டு, அவசர அவரசமாக தங்களது வீடுகளுக்கு பெற்றோர்களுடன் சென்றனர். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 3 மணிக்கு விழாவிற்கு வருவதாக இருந்த சூழலில் விமானத்தில் வருவது தாமதம் ஏற்பட்டு நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததாக கூறப்பட்டது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - DMK VS PMK: "வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!