மயான ஊழியரை மதுரை தெப்பகுளம் காவல்நிலைய காவலர் தாக்கியதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி  சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றதை தொடர்ந்து நடவடிக்கை.

 

மதுபோதையில் தாக்கியதால் காவலர் மீது நடவடிக்கை

 

மதுரை தெப்பகுளம் அருகிலுள்ள ஐராவதநல்லூர் பகுதியில் உள்ள மயானத்தில் பணிபுரிந்துவரும்  ஊழியரான நல்லமணி என்பவரை தெப்பகுளம் காவல்நிலைய காவலர் ஆனந்த் என்பவர் தாக்கியதால் காயம் ஏற்பட்டதாக கூறி தலையில் காயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மயான ஊழியரை காவலர் ஆனந்த் சாதிய ரீதியாக பேசி மதுபோதையில் தாக்கியதால் காவலர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்ககூறி, மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை முன்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 


 



பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார்.



 

அப்போது காவல்துறையினருக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராவும் கோசங்கள் எழுப்பினர். மேலும் நல்லமணி மீது தாக்குதல் நடத்திய காவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் முழக்கங்களை எழுப்பியவாறு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக அரசு ராஜாஜி மருத்துவமனை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து தகவலறிந்த போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்த காவல் துறையினர்  மயான ஊழியர் நல்லமணி  மீது தாக்குதல் நடத்திய காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டதால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் மயான ஊழியர் நல்லமணியை தாக்கியதாக கூறப்பட்ட  தெப்பக்குளம் காவல் நிலைய காவலர் ஆனந்தை பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார்.