மீனாட்சியம்மன் கோவில் ஆவணி முலத்திருவிழாவில் 6 ஆம் நாள் நிகழ்வாக சிவபெருமானின் திருவிளையாடலான குருத்துரோகம் செய்த சீடனை குரு உருவில் வந்து சீடனின் அங்கங்களை வெட்டி, தண்டித்த பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை நடைபெற்றது. - ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம்.
தமிழ் மாதங்களில் வழியே பல்வேறு திருவிழா
பல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலை மையமாக வைத்தே மதுரை மாநகர் நிர்மாணிக்கப்படுகிறது. உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு, உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மதுரையின் பல நூற்றாண்டு கால அடையாளமாகவும், மதுரையின் நடுவிலும் மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. தமிழ் மாதங்களில் வழியே பல்வேறு திருவிழா முன்னெடுக்கப்படும். இந்நிலையில் மீனாட்சியம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழாவில் 6- ஆம் நாள் நிகழ்வு நடைபெற்றது.

மூலத்திருவிழாவில் 6- ஆம் நாள்
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் நாள்தோறும் சிவபெருமான் நிகழ்த்திய பல்வேறு திருவிளையாடல் லீலைகளான. கருங்குருவிக்கு உபதேசம், நாரைக்கு முக்தி கொடுத்தல், மாணிக்கம் விற்ற லீலை, தருமிக்கு பொற்கிழி அளித்தல், உலவவாக்கோட்டை அருளியது. நடைபெற்ற நிலையில் விழாவின் 6 ஆம் நாள் நிகழ்வான சிவபெருமானின் திருவிளையாடல்களில் ஒன்றான குருத்துரோகம் செய்த சீடனை குரு உருவில் வந்து சீடனின் அங்கங்களை வெட்டி தண்டித்தபாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை நடைபெற்றது.
ஒவ்வொரு அங்கமாக வெட்டினார்.
குலோத்துங்க பாண்டியன் காலத்தில் பாணன் என்ற வயதான வாள்வித்தை ஆசிரியர் வாழ்ந்து வந்தார். அவருடைய சிஷ்யர்களில் சித்தன் என்பவன் மிகவும் தீய குணம் கொண்டவன். அவன் வாள்வித்தை பயிற்சி முடித்து விட்டு, புதிதாக வாள்வித்தை பயிற்சிப் பள்ளியை ஆரம்பித்தான். அப்போது அவன் ஆசிரியரின் மனைவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்தான். இது குறித்து ஆசிரியரின் மனைவி இறைவன் சோமசுந்தரரிடம் முறையிட்டார். எனவே இறைவன் ஆசிரியர் வேடத்தில் சென்று, சித்தனை வாள் போருக்கு அழைத்தார். போரில் ஆசிரியரின் மனைவியை நினைத்த நெஞ்சையும், பேசிய நாக்கையும், அந்த பெண்ணை தொட்ட கைகளையும், கண்ட கண்களையும் என ஒவ்வொரு அங்கமாக வெட்டினார்.
இறைவனே ஆசிரியர் வடிவில்
சிவ பெருமான், இறுதியில் சித்தனின் தலையையும் வெட்டிக் கொன்றார். இறைவனே ஆசிரியர் வடிவில் வந்து நிகழ்த்திய திருவிளை யாடலை அறிந்த குலோத்துங்க பாண்டியன், வயதான ஆசிரியர் பாணனுக்கு தக்க மரியாதைகள் செய்து கவுரவித்தார். இந்த திருவிளையாடலை திருவிளையாடலை எடுத்துரைக்கும் வகையிலான சிறப்பு அலங்காரமான கையில் வாளுடன் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன், மீனாட்சி அம்மனும் எழுந்தருளி காட்சிஅளித்தனர். முன்னதாக சுவாமிக்கும் அம்மனுக்கும் பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. ஆவணி திருவிழாவில் 6ஆம் நாள் நிகழ்வை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழாவில், தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை நடைபெற்றது !