நாங்கள் வாக்கு திருட்டு செய்திருந்தால் தமிழகத்தில் திமுக எப்படி ஜெயித்திருக்கும் அவர்கள் ஆளும் கட்சியாக வந்திருக்க முடியாது. ராகுல் காந்தி தகுதி குறைந்து தான் எப்போதும் பேசுகிறார். - நயினார் நாகேந்திரன் பேட்டி.
மதுரை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்..,:
வாக்குத் திட்டத்தில் ஈடுபட்டு தான் மோடி வென்றால் என்னிடம் ஆதாரம் உள்ளது என ராகுல் காந்தி கூறியது குறித்த கேள்விக்கு
ராகுல் காந்தி எந்த ஆதாரத்தை வைத்திருக்கிறார் என தெரியவில்லை. அவர்கள் காலத்தில் வாக்கு திருட்டு செய்திருக்கிறார்கள். நாங்கள் வாக்கு திருட்டு செய்திருந்தால் தமிழகத்தில் திமுக எப்படி ஜெயித்திருக்கும் அவர்கள் ஆளும் கட்சியாக வந்திருக்க முடியாது. ராகுல் காந்தி தகுதி குறைந்து தான் எப்போதும் பேசுகிறார்.
விஜய் மீனவர்கள் குறித்து பேசிய கேள்விக்கு
காங்கிரஸ் கூட்டணியுடன் இருந்திருக்கிறார்கள். எத்தனை மீனவர்களை சுட்டுக் கொண்டிருக்கிறார்கள். தற்போது பிரதமர் மோடி 11 ஆண்டுகால ஆட்சியில் ஒருவரை கூட சுட்டுக் கொள்ளவில்லை. தூக்கு தண்டனைக்கு செல்ல இருந்த ஒருவரை கூட மீட்டுக் கொண்டு வந்திருக்கிறார். இப்போதும் இலங்கையில் இருக்கக்கூடிய மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திமுகவிற்கும் தமிழக வெற்றி கழகத்திற்கும் தான் போட்டி என விஜய் கூறியது குறித்த கேள்விக்கு:
விஜய் இதுவரை எந்த தேர்தலையும் சந்திக்கவில்லை இப்போதுதான் வந்திருக்கிறார். வந்தவுடன் ஆட்சிக்கு வந்து விடுவோம் என்று நினைத்தால் தமிழக மக்கள் எதை நினைத்து வாக்களிப்பார்கள் என்று சிந்தித்துப் பேச வேண்டும்.
அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவதாக வரும் போஸ்டர் குறித்த கேள்விக்கு
அண்ணாமலை எங்கள் கட்சியின் முன்னாள் தலைவர் இப்போதும் கட்சியில் இருக்கிறார். இது போன்ற சம்பவத்தை பரப்புவது ஊடகத்தின் வேலையா திமுகவின் வேலையா அவர்கள் கேட்க சொல்லி நீங்கள் கேட்கிறீர்களா. அந்த போஸ்டர் யார் ஒட்டினார் என தெரியவில்லை.
ஓபிஎஸ் டிவியை அதிமுகவில் இணைப்பது குறித்த கேள்விக்கு
தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் உள்ளது. அவர்கள் உட்கட்சி பிரச்சனைக்கு நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது கூட்டணிக்கு வந்தால் நாங்கள் சேர்த்துக் கொள்வோம்.
இபிஎஸ் தான் விஜய்யை எதிர்க்கட்சித் தலைவராக்க போகிறார் என்று மாணிக்க தாகூர் கூறியது குறித்த கேள்விக்கு
மாணிக்க தாகூர் ஊருக்கே வரவில்லை. அப்பாவி மக்களின் வாக்குகளை வாங்கி விட்டு டெல்லியில் இருக்கிறார். அவருக்கு தொகுதி மக்களின் பிரச்னையே தெரியாது. விடுதலை சிறுத்தைக்கு மந்திரி பதவி கொடுப்பீர்களா, கம்யூனிஸ்ட் கட்சி போராடுகிறார்களே அவர்கள் கூட்டணியில் இருக்கிறார்களா என யாரும் கேட்கவில்லை ஏன் என தெரியவில்லை. அரசியலில் நிரந்தர எதிரியின் நண்பரும் இல்லை. கொள்கை அளவில் யாரும் கூட்டணி சேரவில்லை. திமுகவிலும் கொள்கை அளவில் கூட்டணி இல்லை” எனவும் தெரிவித்தார்.