உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு, உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மதுரையின் பல நூற்றாண்டு கால அடையாளமாகவும், மதுரையின் நடுவிலும் மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. ஆன்மீகம், வரலாறு, கலை, பண்பாட்டு அடையாளங்களுடன் மீனாட்சி கோயில் இன்றளவும் திகழ்கிறது. சித்திரை திருவிழாவில் சுவாமி புறப்பாடுக்கு முன் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக இருக்கு. டங்கா மாடு, யானை, குதிரை, ஒட்டகம் என்று விலங்குகள் சில குழந்தைகள் உற்சாகப்படுத்தும்.  இதற்காக கோயிலில் 'பார்வதி' என்ற சுமார் 25 வயதுடைய பெண் யானை ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. கடந்த 2000-ல் அருணாசல பிரதேசத்தில் இருந்து வாங்கப்பட்ட இந்த யானை கோயில் கிழக்கு ஆடி வீதியில் தனியாக அமைக்கப்பட்டுள்ள மண்டபத்தில் கவனிக்கப்பட்டு வருகிறது. 





 

இந்த சூழலில் மீனாட்சி அம்மன் கோயில் யானை வீதி விழாவின்போது காலில் சிறிய அளவு காயம் ஏற்பட்டு கடந்த 2015 ஆம் ஆண்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மீனாட்சி அம்மன் கோயிலின் உடல் நிலையில் கோயில் நிர்வாகமும் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறை தரப்பில் ஏற்கனவே எச்சரிக்கை வழங்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோயில் யானைக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் ரத்தப் பரிசோதனை மற்றும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு மருத்துவ அறிக்கையானது சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.

 


 

கடந்த 2020-ஆம் ஆண்டு மீனாட்சி அம்மன் கோயிலில் பார்வதி யானைக்கு இடது கண்ணில் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோயில் யானையின் கண்கள் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சிகிச்சை அளித்து அளிக்கப்பட்டு வருகிறது.  மீனாட்சி அம்மன் கோயில் யானைக்கு இரண்டு கண்களிலும் கண்புரை ஏற்பட்டு வெண்படலம் ஏற்பட்டதன் காரணமாக சென்னையில் இருந்து வந்த மருத்துவ குழுவினரும் மதுரையில் உள்ள கால்நடை மருத்துவக் குழுவினர் இணைந்து தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். யானைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தாய்லாந்தில் கடந்த ஜூன் மாதம் பிரத்யேக  மருத்துவ குழுவினர் மீனாட்சி அம்மன் கோயில் யானைக்கு சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் மீனாட்சி அம்மன் கோயில் யானைக்கு இதுவரை கண்ணில் ஏற்பட்ட குறைபாட்டிற்கு சிகிச்சைக்காக எவ்வளவு செலவு ஏற்பட்டுள்ளது. மேலும் தாய்லாந்து குழுவினர் தமிழகம வந்தபோது அவருக்கு எவ்வளவு ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது என்ற பல்வேறு கேள்விகளை முன் வைத்து மதுரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் என்பவர் கேட்ட கேள்விக்கு கோயில் நிர்வாகம் சார்பாக பல்வேறு பதில்கள் அளித்துள்ளது.


அதில் கடந்த 2020 ஆண்டு மே மாதம் முதல் மீனாட்சி அம்மன் கோயில் யானைக்கு கண்ணில் குறைபாடு ஏற்பட்டதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அதன் படி மதுரை கால்நடை மருத்துவ குழுவினர் மற்றும் சென்னையில் இருந்து வந்த கால்நடை மருத்துவ குழுவினர் மற்றும் தாய்லாந்து மருத்துவ குழுவினர் இதுவரை பல்வேறு கால்நடை மருத்துவர் நிபுணர்கள் சிகிச்சை அளித்துள்ளதாகவும், மேலும் மீனாட்சி அம்மன் கோயில் பார்வதி யானைக்கு சிகிச்சை அளிக்க வந்து சென்ற தாய்லாந்து மருத்துவர்களுக்கு மட்டும் கோயில் நிர்வாகம் சார்பாக பயணப்படி விமான கட்டணம் தங்கும் விடுதி வாகன வசதி உட்பட 6,81,005 லட்ச ரூபாய் அளவிற்கு செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதேபோல் மீனாட்சி அம்மன் கோயில் யானைக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மருந்துகள் வாங்கியதாகவும் மருத்துவர்கள் வந்து சென்ற விமான கட்டணம் என சுமார் 9,08,018 லட்ச ரூபாய் அளவிற்கு செலவுகள் செய்யப்பட்டுள்ளதாக மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.