மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அருகே பூலாங்குளம் கிராமம் உள்ளது. இங்குள்ள வயல் பகுதியில் சில இடங்களில் கடைசிக் கட்ட விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள கண்மாய்கரை மற்றும் கருவேல் மரங்கள் நிறைந்த இடத்தில் பத்திற்கும் மேற்பட்ட மயில்கள் மயங்கியபடி இறந்து கிடந்துள்ளன. இதையடுத்து இப்பகுதி விவசாயிகள் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
மயில் வேட்டையா?
இதையடுத்து நேற்று ஆய்வு மேற்கண்ட போது 18 மயில்கள் கண்டெடுக்கப்பட்டன. தொடர்ந்து இன்று 22 மயிகள் எடுக்கப்பட்டது. மேலும் வனத்துறையினர் மயில்களை தேடும் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் விவசாயம் நடைபெறுவதால் பயிர்களை பாதுகாக்க விஷ மருத்து வைத்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எனினும் விசாரணை முடிந்த பின்னர் தான் முழு விபரம் தெரியவரும் என அதிகாரிகள் கூறினர். மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே கடந்த சில வருடங்களுக்கு முன் சூர்யா நகர் அருகே 42 க்கும் மேற்பட்ட மயில் இறந்தது குறிப்பிடதக்கது. தற்போது கருப்பாயூரணி பகுதியில் 40 மயில்கள் கண்டறியப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கிடைக்கப்பட்ட மயில்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் மயில்கள் இறந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது.
பூச்சி மருந்தா?
மேலும் இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி முத்துராஜ் கூறுகையில்..,” எங்கள் பகுதியில் ஏராளமான மயில்கள் தினமும் வந்து செல்லும். இங்க தான் நானும் மாடுகள் வச்சு வளத்துக்கிட்டு இருக்கேன். நெல் பயிரை சாப்பிடுதுனு சிலர் இதுக்கு மருந்து வச்சுப்பிட்டாங்க. அந்த மயில்கள் மூட்டை, மூட்டையாவ சாப்பிட்ர போகுதுக. எதோ கொஞ்சம், நஞ்சம் சாப்பிடும். அதுக்காக இப்புடி கொண்ணுபுட்டாங்க. எனவே இந்த குற்றத்த செஞ்ச நபர்கள சும்மா விடக்கூடாது. குற்றத்த செஞ்ச நபர்களை கடுமையா தண்டிக்கனும்” என்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ABP NADU Impact: ஏபிபி நாடு செய்தி எதிரொலி - கல்பனா சாவ்லா விருது பெற்றவருக்கு பணி வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்