மதுரையில் இன்று 22.10.2025 பூக்கள் விற்பனை மிக சுமாராக உள்ளது. 1 டன் முதல் 1.5 டன் வரத்து உள்ளது. மழையின் காரணமாக மல்லிகை விளைச்சல் மிகக் குறைவாகவே உள்ளது. 


மதுரை மல்லிகைப் பூ விற்பனை

 

மதுரை மல்லி என்பது மதுரை, விருதுநகர், தேனி, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்படும் சிறப்பு வாய்ந்த பூவாகும். மதுரை மையமாக உள்ளதால் மல்லிகைப் பூ மற்றும் பிற பூக்களுக்கு வணிகம் செய்ய ஏதுவாக உள்ளது. குறிப்பாக மல்லிகைப் பூ கி.மு 300-ஆம் ஆண்டிலிருந்து பயிரிடப்பட்டு வருகின்றன. இதற்கான குறிப்புகள் சங்க இலக்கியங்களில் மற்றும் கோயில் சிற்பங்களில் காணப்படுகின்றன. இப்பூக்கள் தங்களது தனித்துவமான மணம் மற்றும் நறுமணத்திற்காக பிரசித்தி பெற்றவை. இதனால் வெளியூர் பயணிகள் மதுரை வரும் போது மல்லிகைப் பூவை விரும்பி வாங்குகின்றனர். இதே போல் கோயில் நகரமான மதுரையில் பிற பூக்களின் விற்பனையும் எப்போது சூடுபறக்கும். இந்நிலையில் தீபாவளியை தொடர்ந்து மதுரையில் பூக்களின் விலை எப்படி உள்ளது என்பதை காணலாம்.

 



மதுரை மலர் சந்தையில் பூக்களின் இன்றைய விலை நிலவரம்: (22.10.2025)

 

* மதுரை மல்லிகைப் பூ கிலோ ரூ.1000,

 

* பிச்சிப் பூ ரூ.400,

 

* முல்லைப் பூ ரூ.500,

 

செவ்வந்திப் பூ ரூ.150,

 

சம்பங்கிப் பூ ரூ.50,

 

செண்டு மல்லி ரூ.60,

 

கனகாம்பரம் ரூ.500,

 

ரோஸ் ரூ.150,

 

பட்டன் ரோஸ் ரூ.180,

 

பன்னீர் ரோஸ் ரூ.200,

 

கோழிக்கொண்டை ரூ.50,

 

அரளி ரூ.180,

 

மரிக்கொழுந்து ரூ.60,

 

தாமரை (ஒன்றுக்கு) ரூ.10 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பூக்கள் விற்பனை மிக சுமாராக உள்ளது. 1 டன் முதல் 1.5 டன் வரத்து உள்ளது. மழையின் காரணமாக மல்லிகை விளைச்சல் மிகக் குறைவாகவே உள்ளது. அடுத்து திருமண முகூர்த்தம் உள்ளதால் விலை சற்று கூடுதலாக வாய்ப்பு உள்ளதாகவும், மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் முருகன் தெரிவித்துள்ளார்.