பாலியல் குற்றங்களில் ஈடுபடுவர் மீது குண்டர் சட்டம் பாயும் மதுரை மாநகர காவல் துறை எச்சரிக்கை !
மதுரை மாநகரில் கடந்த சில தினங்களாக பள்ளி கல்லூரி மாணவிகள் மீது பாலியல் ரீதியான வன்கொடுமை சம்பவம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. மதுரை மாநகரில் உள்ள 4 அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பதிவான வழக்கு தொடர்பான விவரங்கள் வெளியாகி தற்போது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாநகரில் கடந்த 2020-ம் ஆண்டு 132 வழக்குகளும், 2021-ம் ஆண்டு 124 வழக்குகளும், 2022-ம் ஆண்டு அக்டோபர் வரை 150 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், கடந்த 34 மாதங்களில் மட்டும் மொத்தமாக 406 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மதுரை மாநகரில் பெண் குழந்தைகள் மீது பாலியல் ரீதியான வன்கொடுமை தடுப்பது குறித்து மகளிர் காவல் துறையினர் சார்பாக பள்ளி கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும் வருகிறது. பெண் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்த ஐந்திற்கும் மேற்பட்டோர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் தொடர்பான செய்திகள் படிக்க - கலைஞர் குடும்பத்தில் வாரிசே பிறக்கக்கூடாது என்று தி.மு.க.வினரே நினைப்பார்கள் - செல்லூர் ராஜூ கிண்டல்..!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்