மதுரை மேலமாசி வீதியில் உள்ள போத்தீஸ் ஜவுளி விற்பனை நிலையத்தில் 10க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் 2 மணி நேரத்திற்கு மேலாக தீவிர சோதனை - ஆவணங்களை கைப்பற்றி விசாரணை - காவல்துறை பாதுகாப்பு.

வருமான வரி துறை தாக்கல் தொடர்பான ஆவணங்களை சோதனையிட்டு வருகின்றனர்
 
மதுரை மாநகர் மேலமாசி வீதி பகுதியில் உள்ள போத்தீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஜவுளி விற்பனை நிலையத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் காலை 7.30  மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 10க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் போத்தீஸ் நிறுவனத்தில் காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த நிதியாண்டில் நடைபெற்ற விற்பனை மற்றும் பொருட்கள் வாங்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை சோதனையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். மேலும்  வருமான வரி துறை தாக்கல் தொடர்பான ஆவணங்களை சோதனையிட்டு வருகின்றனர்.
 
ஆவணங்களை கைப்பற்றி வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
 
வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருவதன் காரணமாக போத்தீஸ் நிறுவனத்தின் கதவுகள் அடைக்கப்பட்டு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறையினரின் சோதனை காரணமாக போத்தீஸ் நிறுவனத்தின் முன்பாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 2 மணி நேரத்திற்கு மேலாக நீடித்து வரும் வருமான வரித்துறையினரின் சோதனையின் போது பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், என தகவல் வெளியாகியுள்ளது