மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் திருநங்கைகளுக்கான பன்னோக்கு உயர்சிகிச்சை மருத்துவ பிரிவு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில் ஏராளமான திருநங்கைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.  இந்த  சிறப்பு வார்டில் தென் தமிழ்நாட்டில் முதன்முறையாக திருநம்பிகளுக்கான அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளனர். மதுரையை சேர்ந்த 2 பட்டதாரி இளம்பெண்கள் தோற்றத்தில் திருநம்பிகளாக இருந்து வந்த நிலையில் இருவருக்கும் மாற்று பாலினத்தவர்களுக்கான அறுவை சிகிச்சையை மேற்கொண்டு திருநம்பிகளாக மாற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. 



 

இதை சற்று கவனிக்கவும் -*Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*




 

அறுவை சிகிச்சை முடிவடைந்து தற்போது இருவரும் உடலளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமாக உள்ளனர் என மதுரை அரசு இராசாசி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் ரத்னவேல் தனது செய்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.  இதே நிலையில் மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் உள்ள திருநம்பி - திருநங்கைகளுக்கான சிறப்பு மருத்துவ பிரிவில் வரும் நாட்களில் வியாழன் தோறும் புறநோயாளிகள் பிரிவு செயல்படும் எனவும், 









 

இந்த பிரிவில் தற்போது 37 திருநங்கை மற்றும் திருநம்பிகள் உளவியல் மற்றும் ஹார்மோன் சிகிச்சையில் உள்ளனர் எனவும் பத்து பேர் மூன்றாம் பாலின அறுவைசிகிச்சைக்கு தயார் நிலையில் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். இந்த சிறப்பு சிகிச்சை பிரிவில் செயற்கை மார்பகம், உறுப்பு பொறுத்துதல், குரல்மாற்றம், லேசர் மூலம் முடி நீக்கம் போன்ற சிகிச்சைகள் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ள முதல்வர் ரத்னவேல், திருநம்பிகளுக்கான அறுவை சிகிச்சைகளை சிறப்பாக மேற்கொண்ட அகச்சுரப்பியல் துறை தலைவர் ஸ்ரீதர் தலைமையிலான  மருத்துவகுழுவினருக்கு தனது பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.








 

”வெளித்தோற்றத்தில் 10 வருடங்களுக்கு மேலாக திருநம்பியாக (Trans male) வாழ்ந்து வரும் 24 வயது எம்.காம் பட்டதாரி, மற்றும் 21 வயது பி.காம் பட்டதாரிகளான, இருவர் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக உளவியல் ஆலோசனையுடன் பாலின மாற்று அறுவைச் சிகிச்சைக்கு முந்தைய ஹார்மோன் சிகிச்சையை மேற்கொண்டு வந்தனர். அரசு மருத்துவ குழுவினரால் பெண்ணில் இருந்து ஆணாக மாற விரும்பும் பாலின மாற்று அறுவைச்சிகிச்சையான கர்ப்பப்பை மற்றும் கருமுட்டை நீக்குதல் (Hysterectomy and Salpingo Oophorectomy) வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. திருநம்பி மற்றும் திருநங்கைகளுக்கான உள்நோயாளிகள் பிரிவு ஒட்டுறுப்பு அறுவைச்சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது" என மருத்துவ நிர்வாக்கத்தினர் தெரிவித்தனர்.