பரி பயர் ஆன்லைன் விளையாட்டு தடை செய்யப்பட்ட பிறகும் எவ்வாறு ஆன்லைனில் கிடைக்கிறது.- நீதிபதி


இது போன்ற விளையாட்டுகளால் இளைய சமுதாயம் வீணாகுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - நீதிபதிகள் கருத்து.


தடை செய்யப்பட்ட இது போன்ற விளையாட்டுகள் ஆன்லைனில் கிடைக்காமல் இருப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் - நீதிபதிகள். இதுகுறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. நாகர்கோவிலைச் சேர்ந்த அயறின் அமுதா உயர் நீதிமன்ற மதுரை கிளைகள் தாக்கல் செய்த மனு. எனது மகள் இதழ் வில்சன் நாகர்கோவில் உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை பட்டம் படித்து வருகிறார். இந்நிலையில் எனது மகள் கடந்த ஆறாம் தேதி முதல் காணவில்லை இது குறித்து கன்னியாகுமரி வடசேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன் புகாரின் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


எனது மகள் பப்ஜி மற்றும் பிரி பயர் ஆகிய ஆன்லைன் விளையாட்டு அதிக ஆர்வம் காட்டுவதாக இருந்தால் இதன் மூலம் என் மகளுக்கு ஜெப்ரின் என்பவன் பழக்கமாகி உள்ளான் எனவே அவன்தான் அவனது நண்பருடன் எனது மகளை கிடைத்திருக்க வேண்டும் எனவே எனது மகளை மீட்டு தர காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு நீதிபதி மகாதேவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.


அப்பொழுது நீதிபதிகள் இந்திய அரசால் ஆன்லைன் விளையாட்டுகளான ஃப்ரீ ஃபயர் தடை செய்யப்பட்டு விட்டது இருந்த போதும் இந்த விளையாட்டை எவ்வாறு மீண்டும் விளையாட முடிகிறது.


சைபர் குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுத்து உள்ளார்கள் ஏன் கடும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இதுகுறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கூறி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு.


 




 


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு விதிகள்படி  கொலை, மரணம், பாலியல் பலாத்காரம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர்,  பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரிய வழக்கு


இதுவரை தமிழகத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கொலை வழக்குகளாக பதியப்பட்ட வழக்குகளில் எத்தனை குடும்பத்தினருக்கு விவசாய நிலம், அரசு வேலைவாய்ப்பு, மாத உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது? - தமிழக உள்துறைச் செயலர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.


வாடிப்பட்டி பொட்டுலுபட்டியைச் சேர்ந்த தனபால், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில்மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,” ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு விதிகள்படி  கொலை, மரணம், பாலியல் பலாத்காரம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர்,  பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு 3 மாதத்தில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும், குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை, பாதிக்கப்பட்டோரின் குழந்தைகளுக்கு கல்வி, மூன்று மாதங்களுக்கு வீட்டுக்கு தேவையான அரசி, கோதுமை, பருப்பு ஆகியவற்றை வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.


இந்தச் சட்டப்படி பாதிக்கப்பட்டோரின் ஆதிதிராவிடர், பழங்குடியினர் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. எனவே, தமிழகத்தில் 2001 முதல் 2017 வரை வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, கொலை வழக்கு பதியப்பட்ட வழக்குகளில்,  பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் விதிகளின் அடிப்படையில் விவசாய நிலம்,வேலைவாய்ப்பு வழங்க உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன்,  சத்யநாராயண பிரசாத் அமர்வு இதுவரை தமிழகத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கொலை வழக்குகளாக பதியப்பட்ட வழக்குகளில் எத்தனை குடும்பத்தினருக்கு விவசாய நிலம், அரசு வேலைவாய்ப்பு, மாத உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது என்பது குறித்து தமிழக உள்துறைச் செயலர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.