மேலூர் அருகே உள்ள மேலவளவு பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான சேகரின், முன் கூட்டியே விடுதலையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கோரிய மனு மீதான விசாரணையில், தமிழக உள்துறை செயலாளர்,  மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.


 மதுரை மேலூர் அருகே  உள்ள சென்னகரம்   பகுதியை  சேர்ந்த  மணிகண்டன், என்பவர் தாக்கல் செய்த மனுவில், மேலூர் அருகே  உள்ள கே.முத்துவேல்பட்டி தான் எனது ஊர்.  கிராமத்தில் பட்டியல்  இன மக்கள்  வசிக்கின்றனர். மேலூர் அருகே  உள்ள  மேலவலவு பஞ்சாயத்து 1996 ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட சாதியினருக்காக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட பிரிவாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பட்டியலினத்தை சேர்ந்த  முருகேசன் மேலவளவு ஊராட்சி தலைவராகவும், இறந்த மூக்கன் துணை தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த சூழலில்   மேலவளவு பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு  பஞ்சாயத்து  தலைவராக தேர்வு செய்யப்பட்ட முருகேசன் உட்பட 6 பேர்  , 30.06.1997 அன்று  கொலை செய்யப்பட்டனர்.


New Year 2024: தங்க கவசத்தில் எழுந்தருளிய கற்பக விநாயகர்; பிள்ளைாயார்பட்டியில் 2024 ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு




இந்த வழக்கில்  இதே  பகுதியை சேர்ந்த சேகர்  என்பவரும்  குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு கடந்த 18 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவதித்து வந்துள்ளார். இந்த நிலையில்  ஆயுள் தண்டனை கைதி சேகர், விதிகளின் படி முன்கூட்டியே 2019 ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். விடுவிக்கப்பட்டாலும்,  வழக்கமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனையை  பின்பற்ற  வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு  முன்கூட்டியே விடுவிக்கப்பட்டார். ஆனால், அதன் பிறகு நிபந்தனைகளை மீறி குற்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளார்.
 


12.10.2023 அன்று சேகர் ஒரு குற்றச்செயலில்  ஈடுபட்டதற்கான வழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவாகி உள்ளது. எனவே,  மேலவளவு பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கில் முன் கூட்டியே விடுதலை செய்யப்பட்ட இந்த வழக்கில் சேகரின்,  முன் கூட்டியே விடுதலையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறி உள்ளார். இந்த மனு, நீதிபதிகள் நிஷா பானு, ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இது குறித்து,  மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.




இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Rajinikanth: "எல்லாருக்கும் மகிழ்ச்சியான ஆண்டாக அமையட்டும்” - ரசிகர்களை சந்தித்து ரஜினி புத்தாண்டு வாழ்த்து..!


மேலும் செய்திகள் படிக்க - Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu: காமெடி- பேய் ஜானரில் கோபி - சுதாகர்.. “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது” பட விமர்சனம்!