ஆற்றில் குளிக்க சென்ற இளம் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்று கொலை செய்த வழக்கில்  குற்றவாளிக்கு கீழமை நீதிமன்ற விதித்த ஆயுள் கால தண்டனையை உறுதி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் உள்ள கல்வெட்டாங்குழியில் வசித்து வரும் மணிகண்டன் கடந்த 2013 விஜய் விஜயதசமி நாளன்று பேச்சிப்பாறை அணை கால்வாயில் குளிக்கச் சென்ற அதை பகுதியை சேர்ந்த பெண்ணிடம் கால்வாயில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். அந்த பெண் கூச்சலிடவும் அதே கால்வாயில் தண்ணீரில்  மூழ்கடித்து கொலை செய்தார்.

 

இந்த வழக்கில் கிழமை நீதிமன்றம் மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரி மணிகண்டன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நீதிபதி பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமரவு பிறப்பித்த உத்தரவில், கால்வாயில் குளிக்கச் சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போது பெண் சப்தமிட்டதை அடுத்து இத்தகைய கொடூர கொலை சிறிதும் இரக்கம் இன்றி செய்துள்ளார். கொலை செய்தற்கான சாட்சிகள், ஆதாரங்கள் மருத்துவர் வாக்குமூலம் மருத்துவ சான்று தெளிவாக உள்ளது. 

 

இதன் அடிப்படையில் கீழமை நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. இதுபோன்ற குற்றங்கள் ஆண்கள் தனது உடல் இச்சைக்கு அடிமையாவதால் நிகழ்கின்றது. பெண் மீதான காமம் ஆணின் பகுத்தறிவு சிந்தனையை  குருடாக்கிவிடுகிறது. எனவே, இந்த வழக்கில்  நீதிமன்றம் குற்றவாளிக்கு தயவு தாட்சண்யம் காட்ட எந்த முகாந்திரமும் இல்லை ஆகையால் கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்கிறது என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

 


மற்றொரு வழக்கு





 

மயிலாடுதுறையில் நாகானந்தா கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதாக கூறி 8 கோடி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு

 

இந்து அறநிலையத்துறை ஆணையர் மனுதாரரின் மனுவை பரிசீலனை செய்து 8 வாரத்தில்  விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

மயிலாடுதுறை சேர்ந்த சேகர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறை  நாகானந்தா சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடத்துவதாக கூறி இதே பகுதியை சேர்ந்த நித்தியா, ஜெயக்குமார், சங்கர், செல்லப்பா ஆகியோர் மக்களிடமிருந்து 8 கோடி ரூபாய் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

 

இதுகுறித்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே கும்பாபிஷேகம் நடத்துவதாக பொதுமக்களிடம் எட்டு கோடி ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த வழக்கில் நீதிபதி நிர்மல்குமார் பிறப்பித்த உத்தரவு

 

மயிலாடுதுறை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மனுதாரர் வழங்கிய மனுவை பரிசீலனை செய்து அதனை இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த மனு மீதான புகார் குறித்து இந்து அறநிலையத்துறை ஆணையர் 8 வாரத்தில்  விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.