மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் ஜி.எஸ்.டி வரி மற்றும் மின் கட்டணத்தை உயர்த்திய மத்திய மாநில அரசை கண்டித்து தே.மு.தி.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தே.மு.தி.க., மாநில பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். 500 க்கும் மேற்பட்ட தே.மு.தி.க., கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் கண்ணில் கருப்பு துணி கட்டி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்
பின்னர், பிரேமலதா விஜயகாந்த் மேடையில் பேசுகையில், " எங்களுடைய எல்லா நல்ல தருணங்களும் மதுரையில் தான் அமைந்தது. அதனால் தான் மதுரையில் நான் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறேன். இன்று கொடுக்கப்பட்ட வரவேற்பு பிரமாண்டமாக இருந்தது. மின் உயர்வு கட்டணத்தை ரத்து செய்துவிட்டார்களா என கேக்க வைத்து விட்டத்து. அந்த அளவிற்கு தொண்டர்களிடம் எழுச்சி இருந்தது.
ஆனால் ரூ.100 க்கும், பீருக்கும் சோறுக்கும் கூடிய கூட்டம் அல்ல இது தானாக சேர்ந்த கூட்டம். மத்திய,மாநில அரசிடம் நிதி இல்லை என்றால் ஆண்ட , ஆண்டு கொண்டிருகிக்கின்ற அமைச்சரகளிடம் உள்ள ஊழல் பணத்தை வசூல் செய்தாலே எல்லா துறைகளையும் அரசு சிறப்பாக நடத்த முடியும். மாநில அரசு மட்டுமின்றி மத்திய அரசும் மக்களிடம் வரி பணத்தை வசூல் செய்து மக்களை வஞ்சிக்கிறது. மின்கட்டணம் , சொத்து வரி, பெட்ரோல் டீசல் உயர்வு என திமுக அரசு கொடுக்காத வாக்குறுதிகளை நிறைவேற்றி கொண்டிருக்கிறார்கள். தி.மு.க., அறக்கட்டளை சார்பாக அண்ணா அறிவாலயத்தில் பேனா- வை வைக்கட்டும், மக்களின் வரிப்பணத்தில் வைக்கக்கூடாது. எப்படி நியாயம் கேட்டு கண்ணகி மதுரையை எரித்தாலோ, அது போல மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால், இன்றைக்கு கண்ணகியாகி நான் எல்லா இடங்களிலும் அண்ணியாராக நான் வருவேன்" என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்