தமிழக மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் சட்டத்துறை உறுப்பினரை நியமிக்கும் வரை மின் கட்டணம் உயர்வு தொடர்பான மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. 


தமிழக மின்வாரியத்தின் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 


அதில் தமிழக மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் சட்டத்துறை உறுப்பினரை நியமிக்கும் வரை மின் கட்டணம் உயர்வு தொடர்பான மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதித்து தனி நீதிபதி 
உத்தரவிட்டுள்ளார். 


பணியிடம் காலியாகும் பொழுது அதற்கான நபர்களை தேர்வு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் அதன் அடிப்படையில் தமிழக மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் பணியிடத்தை நிரப்பவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான நபரை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் தனி நீதிபதி இதனை கருத்தில் கொள்ளாமல் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் தமிழக அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படும் ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளனர். 


நீதிபதி எஸ் எம் சுந்தர் மற்றும் ஸ்ரீமதி அமர்வு 


இந்த வழக்கை நீதிபதி எஸ் எம் சுந்தர் மற்றும் ஸ்ரீமதி அமர்வு விசாரணை நடத்தியது.  தமிழக மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் சட்டத்துறை உறுப்பினரை நியமிக்கும் வரை மின் கட்டணம் உயர்வு தொடர்பான மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.