கரூரின் மையப் பகுதியில் அமைந்துள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சொந்தமான  ஆக்கிரமிப்பு  நிலங்களை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

சென்னையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தபெற்ற 100 ஆண்டுகள் பழமையான கோயில்.

கரூர் நகரின் மையப் பகுதியில் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோயிலுக்கு செந்தமாக 10 ஏக்கர் நிலங்கள் உள்ளது. இந்த இடத்தை பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலங்களின் தற்போதைய மதிப்பு  ரூ.200 கோடி மேல் மதிப்பாகும் இந்த நிலங்கள் முழுமையாக ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கபட்டு அதில் வணிக வளாகங்கள் குடியிருப்பு வீடுகள் என கட்டபட்டுள்ளது.

 

கோயிலுக்கு சொந்தமான இடங்களை மீட்டு கோயில் வருமானத்தை அதிகரித்தால் தான் கோயிலுக்கcன பூஜைகள் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க முடியும். 

 

மேலும் கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அறநிலைய துறை மாவட்ட நிர்வாகத்திற்க்கு பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. 

 

எனவே,  சட்டவிரோதமாக கோயில் இடங்களை ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும்." மனு தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த மனுவை ஏற்கனவே விசாரணை செய்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கோயில் நில ஆக்கிரமிப்பு செய்து கட்டபட்டுள்ள வணிக நிறுவனங்களை சீலிட்டு மூட வேண்டும், ஆக்கிரமிப்பு செய்து கட்டபட்டுள்ள குடியிருப்பு உரிமையாளர்கள் தாங்கள் குடியிருக்கு இடம் கோயிலுக்கு சொந்தமானது என கோயில் நிர்வாகத்திடம் உறுதிமொழி பத்திரம் கொடுக்க வேண்டும். என உத்தரவு பிறப்பித்து இருந்தது.

 

இந்த உத்தரவை எதிர்த்து பலர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

 

இந்த மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் மனுதாரர்கள் மீண்டும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நாடி தீர்வு பெற்று கொள்ள உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.

 

இந்நிலையில் இந்த வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணை வந்தது.

 

இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,

 

* கல்யாண பசுபதி ஈஸ்வரர் கோவிலின் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்து உள்ளவர்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்க வேண்டும் 

 

* நோட்டீஸ் வழங்கி அவர்களது ஆவணங்களையும் சமர்ப்பிக்க போதிய கால அவகாசம் கொடுக்க வேண்டும் 

 

* இதில் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு உறுதிப்படுத்தப்பட்டால் உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் 

 

* இந்த நடவடிக்கைகள் 12 வாரத்தில் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

 

* கோவில் நில ஆக்கிரமிப்புகள் குறித்து பல்வேறு உத்தரவுகளை கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது இந்த உத்தரவுகளை மீறி சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் செயல்பட்டிருந்தால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தனர்.

 















மற்றொரு வழக்கு

 

மாற்றுத்திறனாளிகள் அனைத்தையும் தடையின்றி அணுகுவதற்கு நாம் எல்லாம் முயற்சிகளையும் எடுக்க வேண்டும் இதனை நமது வீட்டில் இருந்தே தொடங்கினால் நிச்சயம் நடைமுறைப்படுத்த முடியும் நீதிபதிகள் ஜி ஆர் சுவாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.

 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா மல்லி கிராமத்தில் உள்ள சர்வே எண்16746 நிலத்தினை ஆய்வு செய்யக்கோரி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுசீராய்வு செய்யக்கோரி மாலதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்

 

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் ஜி ஆர் சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில்,

 

26.8.2022 அன்று காளீஸ்வரி என்பவர் தாக்கல் செய்த மனுவைவிசாரித்து இந்த நீதிமன்றம் சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து தரப்பினருக்கும் உரிய நோட்டீஸ் அனுப்பப்பட்டு சர்வே எடுக்க உத்தரவானது பிறப்பிக்கப்பட்டது எதிர்ப்பு இருக்கும் பட்சத்தில் கிழமை நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடரவும் அறிவுறுத்தப்பட்டது.

 

மேலும் இது தொடர்பாக ஏற்கனவே ஸ்ரீவில்லிபுத்தூர் கீழமை நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணையில் கிழமை நீதிமன்றம் நிலங்களை ஆய்வு செய்வதற்கு வழக்கறிஞர் ஆணையம் நியமித்து உத்தரவிட்டுள்ளது எனவே இதைத் தொடர்ந்து இந்த நீதிமன்றம் மனுதாரரின் சீராய்வு மனுவை அனுமதித்து  உத்தரவிட்டார் தொடர்ந்து  ஸ்ரீவில்லிபுத்தூர் கீழமை நீதிமன்ற நீதிபதியிடம் சில கருத்துக்களை சொல்ல விரும்புவதாக தெரிவித்த நீதிபதி. நமது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி கடந்த சில நாட்களுக்கு முன்னால் மாற்றுத்திறனாளிகளுக்கான நாளை கொண்டாடினோம் .இந்த வேலையில் மாற்றுத்திறனாளிகள் அனைத்தையும் எந்தவித தடையும் இன்றி அணுகுவதற்கு நாம் முயற்சி எடுக்க வேண்டும் இதை நமது வீட்டிலிருந்தே தொடங்கினால் நிச்சயம் நடைமுறைப்படுத்த முடியும் எனவே ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் வருங்காலத்தில் வழக்கறிஞர்கள் ஆணையம் நியமிக்க கூடிய வழக்குகளில் ஸ்ரீவில்லிபுத்தூர் பார் கவுன்சிலிங்கில் இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளி வழக்கறிகளுக்கு முன்னுரிமை வழங்கலாமே என கருத்து தெரிவித்தும் இந்த கருத்தினை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிபதி அவர்கள் நண்பருக்கும் தெரிவிக்கலாம் என நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார்