மல்லிகைப்பூ வரத்து குறைவாக இருக்கும் சூழலிலும், விசேஷம் ஏதும் இல்லாத காரணத்தால் பூக்களின் விலை குறைந்து காணப்படுகிறது.

மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்
 
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு நாள்தோறும் பல இடங்களில் இருந்து பூக்கள் வந்து சேர்கிறது. குறிப்பாக மதுரையை சுற்றியுள்ள இடங்களில் இருந்து மணம் மிக்க மல்லிகைப் பூக்கள் கொண்டுவரப்படுகிறது. மதுரை மல்லிகைப் பூக்களுக்கு எப்போதும் தேவை இருந்து வருகிறது. பனிக்காலங்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை அதிகளவு இருக்கும். இந்த சூழலில் மதுரை மல்லிகைப் பூ மற்றும் பிற பூக்களின் விலை வெகுவாக குறைந்துள்ளது.
 
மதுரை மலர் சந்தையில் பூக்களின் இன்றைய விலை நிலவரம்: (03.10.2025)
 
மதுரை மல்லி கிலோ ரூ.500, பிச்சி ரூ.300, முல்லை ரூ.300, செவ்வந்தி ரூ.150, சம்பங்கி ரூ.50, செண்டு மல்லி ரூ.40, கனகாம்பரம் ரூ.500, ரோஸ் ரூ.150, பட்டன் ரோஸ் ரூ.180, பன்னீர் ரோஸ் ரூ.200, கோழிக்கொண்டை ரூ.60, அரளி ரூ.150, மரிக்கொழுந்து ரூ.70, தாமரை (ஒன்றுக்கு) ரூ.15 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 
பூக்கள் வரத்து குறைவு - ஆனாலும் விலை குறைவாக தான் உள்ளது
 
மல்லிகைப்பூ வரத்து குறைவாக இருக்கும் சூழலிலும், விசேஷம் ஏதும் இல்லாத காரணத்தால் பூக்களின் விலை குறைந்து காணப்படுகிறது என மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் முருகன் தெரிவித்துள்ளார். தீபாவளி சமயத்தில் பூக்களின் விலை அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.