திண்டுக்கல் அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் 3000 மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு அரை கிலோ முதல் 5 கிலோ வரை உள்ள மீன்களை பிடித்துச் சென்றனர்.

Continues below advertisement

மீன்பிடி திருவிழா என்பது, தமிழக கிராமங்களில் பருவமழையை வரவேற்கவும், விவசாய வளம் செழிக்கவும், சமூக ஒற்றுமையை வளர்க்கவும் நடைபெறும் ஒரு பாரம்பரிய நிகழ்வாகும். இந்தத் திருவிழாவில் கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி, மீன்பிடி வலைகள் மற்றும் பிற கருவிகளைக் கொண்டு கண்மாய் அல்லது குளங்களில் உள்ள மீன்களைப் பிடித்து தங்கள் மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்துகின்றனர்.

Continues below advertisement

திண்டுக்கல் மாவட்டம் கோம்பையன்பட்டி பகுதியில் உள்ளது அனைகுளம் சுமார் 250 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளம் பின்னர் கடந்த வருடம் முழு கொள்ளளவு எட்டியது. இதனை அடுத்து ஊர் பொதுமக்கள் சார்பில் கடந்த வருடம் குளத்தில் மீன்கள் வாங்கி விடப்பட்டது. தற்பொழுது குளத்தில் நீர் வற்றிய நிலையில், ஊர் பொதுமக்கள் சார்பாக மீன்பிடித் திருவிழா  நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நேற்று காலை கோம்பை யான்பட்டி பகுதியில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக சென்று விநாயகர் கோவிலில் வழிபட்ட பொதுமக்கள் பின்னர் குளக்கரையில் அமைந்திருக்கும் கன்னிமார் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கினர்.

இதனை அடுத்து மீன்பிடித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த மீன்பிடி திருவிழாவில் வலை, ஊத்தா போன்றவற்றால் கட்லா, ரோகு, விரால், ஜிலேபி போன்ற மீன்களை 30 கிராமங்களில் இருந்து வந்திருந்த 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் குடும்பங்களுடன் குளத்தில் இறங்கி ஆர்வமுடன் பிடித்துச் சென்றனர். மீன் பிடித் திருவிழாவில் அரை கிலோ முதல் 5 கிலோ வரையிலான பல்வேறு வகை மீன்கள் பொதுமக்களுக்கு கிடைத்தன.

மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து ஊத்தா, கூடை, கச்சா, கொசுவலை போன்ற பல்வேறு மீன்பிடி கருவிகளை எடுத்து வந்து, கண்மாய்களில் மீன்களைப் பிடிக்கின்றனர். இந்தத் திருவிழாவில் ரோகு, விரால், ஜிலேபி, கெண்டை, குரவை, சங்கரா, கெளுத்தி போன்ற பல்வேறு வகையான மீன்கள் பிடிக்கப்படுகின்றன.  இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் இந்தப் திருவிழாவில் கலந்துகொண்டு உற்சாகமாக மீன்களை அள்ளிச் செல்கின்றனர். இந்தக் கண்மாய் மீன்பிடித் திருவிழா காலங்காலமாகத் தொடர்ந்து வரும் ஒரு பாரம்பரிய நிகழ்வாகும்.