மகளிருக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே சமுதாயம் வளரும் என மதுரை நடைபெற்ற விழாவில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியுள்ளார். 


மதுரையில் தமிழ்நாடு தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பில் பெண்கள் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் விதமாக "தொழிலணங்கு" என்ற தலைப்பில் நடைபெறும் நிகழ்வில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி, மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க முதன்மை செயல் அலுவலர் சிவராஜா ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்வில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கொள்முதல் செய்யும் நிறுவனங்களின் விருப்ப கடிதங்கள் வழங்கப்பட்டன. பால் காளான், மஞ்சள் பை, கடலை எண்ணெய், மசாலா பொருட்கள், புடவை, அப்பளம் ஆகியவைகளை கொள்முதல் செய்வதற்கான விருப்ப கடிதங்கள் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்,


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Mylapore Peacock Statue: இறுதிகட்ட விசாரணையில் மயில் சிலை வழக்கு - சிலைகடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி பேட்டி




விழாவில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசுகையில் "திராவிட இயக்கம் தோன்றிய காலத்திலிருந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. தத்துவமும், கொள்கையும் எவ்வளவு முக்கியமே அந்த அளவிற்கு செயல்திறன் மிக முக்கியமானது, 23 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட சுய உதவி குழுக்கள் இடையே ஏற்ற தாழ்வு இருக்கிறது. சில இடங்களில் சுய உதவிக் குழுக்கள் செயல்பாட்டில் உள்ளது. சில இடங்களில் செயல்பாட்டில் இல்லை.


Vikram Success: உதயநிதியின் சப்போர்ட்.. கூரையை பிய்த்துக்கொட்டும் கோடிகள்..விக்ரம் சக்ஸஸ் இப்படித்தான் பாஸ்..!




சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.


சுய உதவிக் குழுக்களை செயல்பாட்டிற்கு கொண்டு வர பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது, மதுரையை முன் மாதிரியாக கொண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு திட்டங்கள் கொண்டு வர உள்ளோம். மதுரையை தொடர்ந்து தமிழகம் முழுதும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும், 30 ஆண்டுகளாக வெளிநாடுகளில் உயர் பொறுப்புகளை வகித்து இருக்கிறேன், மகளிருக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே சமுதாயம் வளரும் என்பதை தெரிந்து கொண்டுள்ளோம்" என பேசினார்.