EVM மிஷினில் இப்படித்தான் ஓட்டு போடணும் மாணவிகளுக்கு தத்ரூபமாக எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர்.

Continues below advertisement

வாக்காளர் விழிப்புணர்வு மதுரை மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் முழுமையான வாக்குப்பதிவினை உறுதிப்படுத்தும் வகையில் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள மீனாட்சி அரசு மகளிர் கலை கல்லூரியில் வாக்களிப்பதின் அவசியம் குறித்தான ஓவியப்போட்டி நடைபெற்றது. இதில் 40க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு தேர்தலில் வாக்களிப்பதின் அவசியம் தேர்தலை நேர்மையாக நடத்துவது தேர்தலில் அச்சமின்றி வாக்களிப்பது உள்ளிட்ட கருத்துருவாக்கத்தை மையமாக வைத்து பல்வேறு விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர். இதனை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்த மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். பின்னர் மாணவிகளிடம் பேசிய மாவட்ட தேர்தல் அலுவலர் இதுவரை நீங்கள் வாக்களித்துள்ளீர்களா?  EVM இயந்திரம் பற்றி தெரியுமா? என கேட்டபோது தாங்கள் முதல் முறை வாக்காளர்கள் என பதிலளித்தனர். இதனை தொடர்ந்து மாணவிகளுக்கு மாதிரி EVM இயந்திரம் மூலமாக அச்சமின்றி வாக்களிப்பது எப்படி என்பதை விளக்கும் வகையில் மாணவிகளை அழைத்து வந்து அவர்களுக்கு தத்ரூபமான விளக்கம் அளித்த மாவட்ட தேர்தல் அலுவலர் பிரவீன் குமார் EVM இயந்திரத்தின் செயல்பாடு எப்படி வாக்களிக்க வேண்டும் வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கும் நாளில்  தேர்தல் அதிகாரிகள் நடந்து கொள்வார்கள் என்பது போல மாணவிகளை தேர்தல் அலுவலர்கள் போல நியமித்து அவர்களுக்கு முழுவதுமாக எடுத்துரைத்து விளக்கம் அளித்தார்.

விளக்கமும் அளித்த நிலையில் மாணவிகள் மிகுந்த உற்சாகமடைந்தனர். மேலும் மாதிரி வாக்கு இயந்திரத்தில் எப்படி வாக்களிப்பது என்பது குறித்தான விளக்கமும் அளித்த நிலையில் மாணவிகள் மிகுந்த உற்சாகமடைந்தனர். இதனைத் தொடர்ந்து EVM இயந்திரம் குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது பேசிய மாவட்ட தேர்தல் அலுவலர் பிரவீன் குமார் நீங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் போது அனைத்து தேர்வுகளிலும் EVM இயந்திரம் தொடர்பாக ஏதாவது ஒரு கேள்வி கேட்கப்படும் எனவே முழுமையாக EVM இயந்திரம் செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள் என தெரிவித்தார். மேலும் EVM இயந்திரத்தை பொருத்தமட்டிலும் எந்தவித மின்சார தொடர்பு இன்றி பயன்படுத்தப்படுவதால் அச்சமின்றி வாக்களிக்கலாம் எந்தவித தொடர்பும் இல்லாமல் மிகுந்த பாதுகாப்போடு ஏவிஎம் இயந்திரம் பயன்படுத்தப்படும் மிகுந்த நம்பிக்கையோடு வாக்களிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

Continues below advertisement