நாடாளுமன்ற தேர்தல்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான, தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு வாக்காளர்களை கவரும் விதமாக அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையை தயாரித்து வருகின்றன. அதில் மாநில கட்சிகள் மாநிலங்களுக்கான பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க, தேசிய கட்சிகள் நாடு தழுவிய பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. அந்த வகையில் முக்கிய அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கை இறுதி வடிவம் பெற்றுள்ளதாக தெரிகிறது. இதில் வாக்காளர்களைக் கவரும் வகையில் மிகப்பெரிய வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளதாக பேசப்படுகிறது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் விவசாயிகளை கருத்தில் கொண்டு இந்த தேர்தல் அறிக்கை உருவாக்கி வருவதாக பரபவாலக பேசப்படுகிறது.
பா.ஜ.க., விறு விறு
பா.ஜ.க. இந்த தேர்தலில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம் என்று உறுதியுடன் உள்ளது. அதற்கான பரப்புரையில் பிரதமர் மோடி உள்பட பா.ஜ.க. தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பா.ஜ.க. தற்போது தனது இரண்டாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. ஏற்கனவே முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 195 வேட்பாளர்கள் இடம்பெற்றிருந்த நிலையில், இந்த இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 72 வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.
காங்கிரஸ் கார்கே
அதே போல் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சூழலில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே இந்த தேர்தலில் போட்டியிடமாட்டார் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக, டெல்லியில் நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது, பத்திரிகையாளர்கள் நீங்கள் 65 வயதில் ஓய்வு பெறுகிறீர்கள். எனக்கு 83 வயதாகிறது. கட்சியில் எனக்கு வாய்ப்பு அளித்தால் நான் கண்டிப்பாக போட்டியிடுவேன். சில சமயங்களில் நாங்கள் பின்னால் நிற்போம். சில சமயங்களில் நாங்கள் முன்னால் நிற்போம். எங்களிடம் ஏற்கனவே ஒரு தொகுதிக்கு போட்டியிட 10 நபர்கள் ஆர்வத்துடன் கேட்கும் பட்டியலே உள்ளது” என்று தெரிவித்துள்ளார். இப்படி அரசியல் களம் சூடு பிடிக்கும் சூழலி 100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் 'கும்மி ஆட்டம்' ஆடி வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
100% தேர்தல் வாக்குப்பதிவு
தேர்தல் முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த சமயத்தில் தேர்தல் ஆணையத்தின் சார்பாக மாவட்டம் வாறியாக நூறு சதவீதம் வாக்கு அளிக்கும் வகையில் மக்களிடையே பல்வேறு விழிப்புணர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர்கள் சார்பில் பிரம்மாண்ட கோலமிடப்பட்டது அதனை சுற்றி மாவட்ட தேர்தல் அலுவலர், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் பணியாற்றும் பெண் பணியாளர்கள், 100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி 'கும்மி ஆட்டம்' மூலம் வாக்காளர் விழிப்புணர்வு செய்தனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - EXCLUSIVE: மன்சூர் அலிகான் உடன் அமைக்கும் கூட்டணி தான் மெகா கூட்டணியா? - கே.சி. பழனிசாமி சாடல்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Election Congress: பெண்களுக்கான காங்கிரசின் 5 அதிரடியான தேர்தல் வாக்குறுதிகள் - ரூ.1 லட்சம் நிதியுதவி