மதுரை மாநகராட்சி நிர்வாகம் சிறப்பாக செயல்படுவதற்கு, மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - சு.வெங்கடேசன் எம்.பி பேட்டி.
சு.வெங்கடேசன் செய்தியாளர் சந்திப்பு
100 வார்டுகளை கொண்ட மதுரை மாநகராட்சி உடைய ஆணையாளர் சித்ரா விஜயனை இன்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் நேரில் வருகை தந்து சந்தித்து பேசினார். அவரோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் மேயர் பொறுப்பில் உள்ள துணை மேயர் நாகராஜன் உள்ளிட்டோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்..,” SIR பணிகள் குளருபடியாக இந்திய தேர்தல் ஆணையம் நடத்திக் கொண்டிருக்கிறது. மதுரை மாவட்டத்தை பொறுத்தவரையில் வாக்காளர்கள் தான் 2005, 2011 வாக்காளர் பட்டியலில் இருப்பவர்கள். 60% வாக்காளர்கள் 2005-க்கு பிறகு உள்ளவர்கள். இந்த 60% வாக்காளர்களின் பெயர் சேர்க்கப்படுமா? என்கின்ற தெளிவு இல்லை. போதிய அவகாசமும் பயிற்சியும் SIR பணிகளை மேற்கொள்ளக்கூடிய பணியாளர்களுக்கு வழங்கப்படவில்லை. அரசியல் கட்சியைச் சேர்ந்த பகுதி பொறுப்பாளர்கள் மட்டுமின்றி வாக்காளர்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கும் பதில் கிடைக்கவில்லை.
கனமழை வரப்போகிறது
GST யைப் போல தான் இந்த SIR ன்நிலை உள்ளது. களத்தில் ஒரு குழப்பத்தை உருவாக்கி அதில் குளிர் காய்கிறது பாஜக. தேர்தல் ஆணையத்தை முழுமையாக நீங்கள் நம்புங்கள் என்று பாஜக சொல்வது மோசடிக்கத்தான் வழிவகுக்கும். டிசம்பர் 4ம் தேதி எத்தனை நபர்களுக்கு நோட்டீஸ் வழங்கப் போகிறார்கள். 4 நாட்கள் தமிழக முழுவதும் கனமழை வரப்போகிறது. இந்த நேரத்தில் அனைத்து அதிகாரிகளும் தேர்தல் பணிகள் இருக்கிறார்கள். இயற்கை ஈடர்பாடுகளை சந்திக்க வேண்டிய மாவட்ட அரசு நிர்வாகத்தை முழுமையாக இந்த பணியில் ஈடுபடுத்திவிட்டனர். பெரியார் பேருந்து நிலையம் எதிரில் மதுரை தகவல்தொடர்பு மையம் உள்ளது. தற்போது அந்த மையம் தனியார் கடைகளுக்கு வாடகைக்கு விடுவதற்கான ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜான்சிராணி பூங்கா பகுதிகளும் பாரம்பரிய பொருட்கள் இருக்கக்கூடிய ஒரு தளமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வணிக வளாகமாக உருவாக்கப்பட்டது. இவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளரிடம் சொல்லி இருக்கின்றேன். அது குறித்து நடவடிக்கை எடுக்கின்றேன் என்று கூறி இருக்கின்றார்.
அரசுக்கு கெட்டபெயர்
ஏனென்றால் கடந்த காலத்தில் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்து எனக்கு தெரியாது. தற்போது தான் வந்திருக்கின்றேன் என்று மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தார். அரசு கட்டடங்களை வணிக தேவைக்காக விடப்பட்டதை கண்டிக்கத்தக்கது இவற்றை ரத்து செய்ய வேண்டும். மதுரைக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் மதுரையின் அடையாளங்களைக் கொண்ட உணவு வகைகள் மற்றும் பொருட்களை வாங்கி செல்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு வணிக வளாகம். ஆனால் அரசருக்கு கெட்ட பெயரை உருவாக்க வேண்டும் என்கின்ற நோக்கில் யார் இதை செய்கிறார்கள் என்று தெரியவில்லை.
மதுரை மாநகராட்சியில் மேயர் நியமனம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில்,
அரசியல் ரீதியாக மதுரை மேயரும் மதுரையின் உடைய மாநகராட்சி நிர்வாகமும் சிறப்பாக செயல்படுவதற்கு மாநில அரசு உறுதுணையாக இருக்க வேண்டும். கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும். மதுரையினுடைய உள்கட்டமைப்புகளை நிர்வாக ரீதியாக தலை யிட்டும் போதுமானதாக ஆக்கப்பட வேண்டும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்றார்.
நடிகர் விஜயுடன் சந்திப்பு குறித்ததான கேள்விக்கு
இதுகுறித்து ஏற்கனவே சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்த படியால், அது குறித்து பேசினால் அதை மட்டுமே தான் செய்தியாக வெளியிடுவீர்கள். எனவே, அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு தனது செய்தியாளர் சந்திப்பை நிறைவு செய்தார்.